புதிய கட்சியை விட்டு வந்தால் மட்டுமே G.L. பீரிசை சுதந்திரக் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்... பொதுச் செயலாளர்.



முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தற்பொழுது பெற்றுள்ள புதிய கட்சி அங்கத்துவத்திலிருந்து மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைய முடியுமே அன்றி, அக்கட்சியில் இருந்து கொண்டு ஸ்ரீ ல.சு.கட்சியின் அங்கத்துவத்தை வகிக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு வேறு ஒரு அரசியல் கட்சியில் அங்கத்துவம் வகிக்க முடியாது. அவ்வாறு அங்கத்துவம் வகிப்பவர் தானாக கட்சியிலிருந்து நீங்கிக் கொண்டவராக கருதப்படுவார் என கட்சி யாப்பு குறிப்பிடுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்து கொண்டே போட்டியிட்டார். அவர் கட்சியிலிருந்து விலக வில்லை. வேறு கட்சியில் இணைந்தாலே கட்சியின் அங்கத்துவத்தை அவர் இழக்க வேண்டும்.

ஜனாதிபதி எந்தக் கட்சியிலும் சேரவில்லையெனவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

ஜி.எல். பீரிஸ் எம்.பி. கூறுவது போன்று ஜனாதிபதி கட்சியிலிருந்து விலகவில்லையெனவும் அவர் மேலும் கூறினார். D C
புதிய கட்சியை விட்டு வந்தால் மட்டுமே G.L. பீரிசை சுதந்திரக் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்... பொதுச் செயலாளர். புதிய கட்சியை விட்டு வந்தால் மட்டுமே G.L. பீரிசை சுதந்திரக் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்... பொதுச் செயலாளர். Reviewed by Madawala News on 11/06/2016 07:19:00 PM Rating: 5