Accaddemy

ரவி கருணாநாயக்கவின் ஆடம்பர பென்ஸ் ( GLS 350d ) வந்து சேர்ந்தது..



நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆடம்பர காரொன்றை  இறக்குமதி செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலவச வாகன அனுமதி பத்திரத்தின் கீழ் புதிய ஆடம்பர Mercedes Benz கார் ஒன்றை அமைச்சர் இறக்குமதி செய்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 02 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்து காரின் மொத்த வரி ரூபா 29 மில்லியன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் தங்கள் வயிறை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், நிதியமைச்சர் ஆடம்பர காரை வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ரவி கருணாநாயக்கவின் ஆடம்பர பென்ஸ் ( GLS 350d ) வந்து சேர்ந்தது.. ரவி கருணாநாயக்கவின் ஆடம்பர பென்ஸ் ( GLS 350d ) வந்து சேர்ந்தது.. Reviewed by Madawala News on 11/12/2016 11:59:00 AM Rating: 5