ஜனாப் செய்லாப்தீனுக்கு உங்களால் உதவி செய்ய முடியுமா?



-ஏ.எல்.சாதாத் மஜீட்-

இவர் கிண்ணியா UC வீதியில் வசிக்கும் ஜனாப் செய்லாப்தீன் வான் எல ஆயிலியடியை பிறப்பிடமாக கொண்டவர் கிண்ணியா வான்எல புஹாரி வித்தியாலயத்தில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியராகவும் அகதியா வகுப்பு ஆசிரியராகவும் கடமையாற்றிய ஒருவர் இதேவேளை, குறித்த இந் நபர் இஸ்லாமிய உணர்வு மிக்கவரும் இஸ்லாத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு பல வகையான எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபடுபவராவார்.

இவர் ஏழ்மையாக இருந்தும் அவரின் அயராத முயற்சியினால் உயர் தரம் கல்விகற்று சித்தியடைந்தார். படிக்கின்ற காலங்களில் பல வகையான கஸ்ட்ங்களை சந்திததார். இவர் பற்றி இன்னுமொரு சோகக் கதையுமுள்ளது.

இவர் சிறுவயதாக இருக்கும் பொழுது இவரின் தாயாரும் தகப்பனும் விவாகரத்து செய்து கொண்டதன் காரணமாக இவரின் வாப்பாவின் தாயரால் வளர்க்கப்பட்டர். அத்துடன் இவரின் உம்மாவும் சிறுவயதில் மரணித்து விட்டார்.

மேலும் படிக்கின்ற காலங்களில் கூட இஸ்லாமிய செயற்பாடுகளில் மிகவும் ஆர்வம் காட்டிய இவர் திருமணத்தின் பின்னரும் கிண்ணியாவில் பல வகையான இஸ்லாமிய நிகழ்வுகளையும் நடத்துவதற்கு உறுதுனையகாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தீராத நோய் ஒன்றின் மூலம் பல வருடமாக பாதிக்கப்பட்டுள்ளார் இதன் காரணமாக இவரிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்து வைத்திய செலவுகளை செய்தார் ஆனால் இன்னும் என்ன நோய் என்று கண்டுபடிக்கபடவில்லை.

அத்துடன் தற்பொழுது வைத்திய செலவுளுக்கு இவரிடம் போதிய பணம் இல்லை இதேவேளை, இவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவே, இவரது நோய் குணமடைய உதவ விரும்புவோர் உதவி செய்து இவர் பூரன குணமடைய அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக ஆமீன்.

உங்கள் உதவிக்கரம் இவருக்காக நீட்ட விரும்பினால்

M.T.Sailabdeen

Ac No. 094200130022092 ( Peoples bank )
ஜனாப் செய்லாப்தீனுக்கு உங்களால் உதவி செய்ய முடியுமா? ஜனாப் செய்லாப்தீனுக்கு உங்களால்  உதவி செய்ய முடியுமா? Reviewed by Madawala News on 11/23/2016 12:01:00 PM Rating: 5