Kidny

Kidny

நியூயார்க் நகரில் ஹிலாரி கிளிண்டன் தனது கணவர் கிளிண்டனுடன் வாக்குப்பதிவு செய்தார்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

நியூயார்க் நகரில் அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தன்னுடை கணவர் பில் கிளிண்டனுடன் வாக்களித்தார்.

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார். இதுவரை எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டனே முன்னணியில் இருந்து வருகிறார். ஹிலாரி ஜனாதிபதி தேர்தலில் எளிதில் வெற்றி பெறுவார் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிலாரிக்கு ஆதரவு 45.5. சதவிதமாகவும், டிரம்புக்கு 42.2 சதவிதமாகவும் உள்ளது.

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருதரப்பு இடையே கடும் போட்டி நிலவும் காரணமாக இத்தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வெற்றியின் விளிம்பில் உள்ள ஹிலாரி, தன்னுடைய கணவர் பில் கிளிண்டனுடன் வாக்குச்சாவடிக்கு சென்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினார். அவர்களுடன் மகிழ்ச்சியுடன் ஹிலாரி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய ஹிலாரி கிளிண்டன், ”என்னால் முடிந்த சிறப்பான பணியை செய்வேன் என்று நம்புகின்றேன்,” என்றார்.
நியூயார்க் நகரில் ஹிலாரி கிளிண்டன் தனது கணவர் கிளிண்டனுடன் வாக்குப்பதிவு செய்தார். நியூயார்க் நகரில் ஹிலாரி கிளிண்டன் தனது கணவர் கிளிண்டனுடன்  வாக்குப்பதிவு செய்தார். Reviewed by Madawala News on 11/08/2016 07:47:00 PM Rating: 5