Accaddemy

கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதி.



கம்பஹா – வெலிவேரி பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்றை கொள்ளையிட்டு தப்பி சென்ற வேளையில் வாகன விபத்துக்குள்ளான இருவர் காயமடைந்து கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தற்போது காவற்துறை பாதுகாப்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு குறித்த நபர்கள் கம்பஹா - வெலிவேரி பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்றை உடைத்து கொள்ளையிட்ட பின்னர் முச்சக்கர வண்டியில் தப்பி சென்றுள்ள வேளையில், அந்த நிலையத்தின் உரிமையாளர் அவர்களை பின்தொடர்ந்து சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது அந்த சந்தேக நபர்களை பிடித்து கம்பஹா காவற்துறையில் ஒப்படைத்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர் காவற்துறையால் அவர்கள் இருவரும் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதி. கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதி. Reviewed by Madawala News on 11/27/2016 04:22:00 PM Rating: 5