நாம் வாழ்வது மதீனாவிலல்ல.. i


நாம் வாழ்வது மதீனாவில் என்றும் ஆட்சியாளர் உமர் ரழி அவர்கள் என்ற எண்ணம் முஸ்லிம்களை விட்டு முதலில் ஒழிக்கப்பட வேண்டும். 

ஏற்கனவே மக்கா காலத்திலிருந்த நாம் 
அந்த நிலையை எமது வலுவான நல்லுறவால் இல்லாமல் செய்து தற்போது அபீசீனியா போன்ற கட்டத்தில் இருக்கிறோம். 

நாம் தற்போது அபீசீனியாவிலும் நஜ்ஜாஷி போன்ற ஒருவரின் ஆட்சியின் கீழும் இருக்கிறோம், ஜஃபர் இப்னு அபூ தாலிப் ரழி அவர்கள் பேசியது போன்று கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து நிதானமாகவும் கனிவான வார்த்தைகளினூடாகவும் எமது பக்கத்திலுள்ள நியாயங்களை எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும். 

இவ்வசாதாராணத சூழ்நிலையில் கட்சி, இயக்க பேதங்களை மறந்து முஸ்லிம்களின் ஆன்மீக, அரசியல் தலைமைகள் முன்னின்று முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும்,  தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரனாகி விடுவதற்கு அவர்கள் அனுமதிக்காது தகுந்த நேரத்தில் சமூகத்துக்கு பொருத்தமான வழிகாட்டல்களை வழங்குவது காலத்தின் கட்டாயத் தேவையாகும். 

அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி
20/11/2016
நாம் வாழ்வது மதீனாவிலல்ல.. i நாம் வாழ்வது மதீனாவிலல்ல.. i Reviewed by Madawala News on 11/20/2016 04:25:00 PM Rating: 5