நான் தப்பியோடவில்லை.. வேண்டிய விசாரணைக்கு முகம் கொடுப்பேன். i



 

தான் ஒரு குற்றவாளியென எங்கும் உறுதியாகவில்லையெனவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கான விசாரணைக்கு முகம்கொடுக்க வுள்ளதாகவும் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்தார்.


வெளிநாடு சென்றிருந்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் இன்று பிற்பகல் நாடு திரும்பினார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.


தான் நாட்டிலிருந்து தப்பி ஓடவில்லை. தவறு செய்யவில்லையென்றால், ஏன் தப்பியோட வேண்டும். திருமண நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன். தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளேன்.


சட்ட மா அதிபருக்கு கோப் குழு முடிவு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவரது கருத்து வெளியான பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம் எனவும் அவர் மேலும் கூறினார். D C

நான் தப்பியோடவில்லை.. வேண்டிய விசாரணைக்கு முகம் கொடுப்பேன். i நான் தப்பியோடவில்லை.. வேண்டிய விசாரணைக்கு முகம் கொடுப்பேன். i Reviewed by Madawala News on 11/03/2016 08:36:00 PM Rating: 5