சற்று முன் அமெரிக்க தேர்தல் களத்தை அமளி துமளி ஆக்கிய இரண்டு பெண்களால் அங்கு பரபரப்பு i




அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று
 
"எங்கள் மார்பகங்களை பிடிக்காதீர்கள், டிரம்ப்" என்று கத்தியபடியே வாக்குப்பதிவு மையத்திற்குள் மேலாடையை கழற்றி எறிந்த இரு பெண்களால் நியூயார்க்கில் பரபரப்பு நிலவியது.

அமெரிக்க ஜனாதிபதிதேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இலங்கை நேரப்படி நாளை முற்பகலில் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கும்.

இந்த நிலையில், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக நியூயார்க் நகரின், மிட்டவுன் மேன்ஹேட்டன் பகுதியிலுள்ள, 59வது எண் வாக்குப்பதிவு மையத்தில் நூதன போராட்டம் இன்று இன்று நடைபெற்றது. அந்த நகர நேரப்படி காலை 8.15 மணிக்கு போராட்டம் நடைபெற்றது. 20-25 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் வாக்குப்பதிவு மையத்திற்குள் வந்து திடீரென மேலாடைகளை கழற்றி எறிந்துவிட்டு, மார்பகங்களை காண்பித்தபடி டிரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

"Trump, grab your balls" என்ற வாசகங்கள் ஒரு பெண்ணின் மார்பகங்களிலும், வயிற்றிலும் கறுப்பு பெயிண்ட்டால் எழுதப்பட்டிருந்தன. மற்றொரு பெண் மார்பில் "Hate Out" என எழுதப்பட்டிருந்தது. "எங்கள் மார்பகங்களை பிடிக்காதீர்கள், டிரம்ப்" என்று அவர்கள் கோஷமிட்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவர்களை பிடித்து வெளியேற்றினர். பெண்கள் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் சபல புத்தி உள்ளவர் என்பது அவரது ஆபாச பேச்சு ஆடியோ மூலம் அம்பலமானது. பெண்களின் மார்பகங்களை திடீரென பற்றி பிடித்து ரசிப்பது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த செயலை எதிர்க்கும் வகையில் வாக்குப்பதிவு தினத்தில் இப்பெண்கள் இப்போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சற்று முன் அமெரிக்க தேர்தல் களத்தை அமளி துமளி ஆக்கிய இரண்டு பெண்களால் அங்கு பரபரப்பு i சற்று முன் அமெரிக்க தேர்தல் களத்தை அமளி துமளி ஆக்கிய இரண்டு பெண்களால் அங்கு பரபரப்பு i Reviewed by Madawala News on 11/08/2016 08:15:00 PM Rating: 5