ஈராக்கில் கடும் போர் ஐ.எஸ். தீவிரவாத தலைவர் பக்தாதி மொசூலில் இருந்து தப்பி ஓட்டம், is 
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

ஈராக்கில் கடும் போர் நடைபெறுவதால் மொசூலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி தலைவர் பக்தாதி தப்பி ஓடி விட்டார்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிர வாதிகளிடம் இருந்து மொசூல் நகரை கைப்பற்றுவதில் ராணுவம்  தீவிரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போர் கடுமையாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவம் வசம் வந்து விட்டது.

இதற்கிடையே, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்தாதி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

போர் உச்ச கட்டத்தை அடைந்த நிலையில் திடீரென அவரது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானது. அதில் மொசூல் நகரை தக்க வைக்க ஐ.எஸ். அமைப்பினர், தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். எனவே  அவர் மொசூலில் பதுங்கி இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் அவர் மொசூல் நகரில் இல்லை. அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் அமைப்பின் உளவுத் துறை அளித்துள்ள  தகவலின் அடிப்படையில் தாம் இதை தெரிவிப்பதாக அவர் கூறி யுள்ளார்.
ஈராக்கில் கடும் போர் ஐ.எஸ். தீவிரவாத தலைவர் பக்தாதி மொசூலில் இருந்து தப்பி ஓட்டம், is ஈராக்கில் கடும் போர் ஐ.எஸ். தீவிரவாத  தலைவர் பக்தாதி மொசூலில் இருந்து தப்பி ஓட்டம், is Reviewed by Madawala News on 11/05/2016 12:44:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.