Ad Space Available here

பதுளை மா நகருக்கு அவசர தேவையாகவுள்ள ஜனாசா நலன்புரி சேவையை மலையக முஸ்லிம் கவுன்சில் துரிதமாக முன்னெடுக்கும் iபதுளை மா நகருக்கு அவசர தேவையாகவுள்ள ஜனாசா நலன்புரி சேவையை மலையக முஸ்லிம் கவுன்சில் துரிதமாக முன்னெடுக்கும் ,!
UCMC செயலாளர் எம் பி செய்யத் முஹம்மத் தெரிவிப்பு .
அப்துல் வாஹித் குத்தூஸ் – பதுளை.

        கடந்த சனிக்கிழமை மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் பதுளை கிரீன் மவுன்ட் ஹோட்டலில்  ஏற்பாடு செய்யப் பட்ட “ இலக்கை நோக்கிய நகர்வுகளில் பதுளை முஸ்லிம்கள் “ எனும் தலைப்பிலான ஒன்று கூடலின் போது கருத்துரைத்த  UCMC செயலாளர் எம் பி செய்யத் முஹம்மத்  அவர்கள், “பதுளை மா நகருக்கு அவசர தேவையாகவுள்ள ஜனாசா நலன்புரி சேவையை மலையக முஸ்லிம் கவுன்சில் துரிதமாக முன்னெடுக்கும்” என்று  கூறினார்.


 சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் , வர்த்தகர்கள் , பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் உரைநிகழ்த்திய UCMC செயலாளர் எம் பி செய்யத் முஹம்மத்  அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில் ,  “ பதுளை மத்திய வைத்திய சாலைக்கு அருகில் அவதியுறும் வெளிப் பிரதேச முஸ்லிம் நோயாளர்ளுக்காகவும் / நெருக்கடியான ஜனாசா விடயங்களுக்காகவும் அவசரமாக   ஜனாசா நலன்புரி சேவையொன்றை மலையக முஸ்லிம் கவுன்சில் துரிதமாக முன்னெடுக்கவுள்ளது. இந்த விடயத்தில் கடந்த சில தினங்களாக நாம் முகம் கொடுக்க நேர்ந்த சில கசப்பான அனுபவங்கள்  இந்தத் தேவையின் பால எம்மை செயல்படத் தூண்டியது.


         வைத்திய சாலையின் பின்புறமாக பிரேத அறைக்கு அருகாமையில் அமைந்துள்ள பாதையோர மரங்களுக்கடியில் எமது சமூக தாய்மார்கள் , பெண்கள் சாய்ந்து உறங்குகின்றார்கள். அந்த பாதைவழியே சென்ற எமதூர் சகோதரர் ஒருவர் இவர்களை அணுகி ஏன் இவ்வாறு பாதையோரத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வினவிய போது நாங்கள் அக்கரைப்பற்று ஊரைச் சேர்ந்தவர்கள், எமது நோயாளி ஒருவரை வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

நேற்று மத்தியானம் இங்கு வந்தோம். எமக்கு சிங்களம் தெரியாது. ஆண் துணையுமில்லை,   எங்கே போவது எங்கே தங்குவது என்று புரியாமல் உள்ளது. அதனால் தான் அடுத்த பார்வையாளர் நேரம் வரும்வரை இந்த மரத்தடியில் சாய்ந்து கொண்டிருக்கின்றோம்.” என்று பதிலளித்துள்ளார்கள்.

தங்களுக்கு இரவு தங்குவதற்கு வேறு வசதிகள் இல்லாத காரணத்தால் குறித்த எமது ஊர் சகோதரரின் வீட்டு வாசலிலாவது தாங்கிக்கொள்ள முடியுமா என்று வினவியுள்ளார்கள். இந்த நிற்கதிக்கு உள்ளான சகோதரிகளை தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று    இவர்களுக்கு தேவையான  விடயங்களை செய்து கொடுத்து இரவு சாப்பாடு உண்டுகொண்டிருக்கும் போது ,வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த குறித்த நோயாளி வபாத் ஆனதாக செய்தி வர அன்று நள்ளிரவு சுமார் ஒருமணிவரை முயற்சி செய்து  குறித்த ஜனாஸாவை வைத்திய சாலையிலிருந்து வெளியெடுத்து, இரவோடிரவாக ஒரு வாகனத்தையும் ஒழுங்கு செய்து  பலசிரமங்களுக்கு மத்தியில் அந்த ஜனாஸாவை அக்கரைபற்றிட்கு அனுப்பிவைக்கப் பட்டது.


இந்த சம்பவம் பல அனுபவங்களில் ஒரு நிகழ்வு மாத்திரமே . இதுபோல் அன்றாடம் பதுளை வைத்திய சாலையில் நிகழ்வதாக அறிய முடிகின்றது.   இந்தத் தேவையை பொறுத்தளவில் பதுளை நகர வாழ் முஸ்லிம்களுக்கு மிக முக்கியத தேவையாக இல்லை  காரணம் மத்திய  வைத்தியசாலை பதுளையில் அமைந்துள்ளதால் பதுளை நகரவாழ் நம் சமூகத்தினர் இந்த விடயத்தில் தமது தேவைகளை இலகுவாக செய்துகொள்கின்றார்கள்  ஆனால் பதுளை மாநகரிலிருந்து தூரப் பிரதேசங்களான மொனராகலை  பிபில பண்டாரவெள ஹப்புத்தள , சில்மியா புற பொரகஸ் போன்ற பிரதேசங்களும் மற்றும் கிழக்கு மாகாண பகுதிகளில் இருந்தும் அசாத்திய நோயாளர்களை பதுளைக்கு கொண்டுவரும் போதும் ,  நோயாளிகள் மரணித்து அவர்களின் ஜனாசா க்களை  கொண்டு செல்ல வேண்டிய தேவைகள் ஏற்படுகின்ற போதும் மிகவும் கஷ்டப் படுகின்ற எமது முஸ்லிம் சமூகத்தவர்களை பொறுத்தளவில இத்தேவை மிகவும் உணரப் படுகின்றது.  


ஆகவே எமது மலையக முஸ்லிம் கவுன்சில் “ U C M C ஜனாஸா தொண்டர் அணி” ( UCMC JANAZA VOLUNTEERS)  என்ற பெயரில் தனியானதொரு பிரிவை ஏற்படுத்தி அதனூடாக இரண்டு பிரதான வேலைத்திட்டங்களை நடைமுறை படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கானதொரு பிரத்தியேக வாகனம் ஒன்றை வாங்குதல்

வைத்திய சிகிச்சைகளுக்காக வரும் நோயாளர்கள் / நோயாளர்களுடன் வரும் பொறுப்பாளர்கள் உறவினர்களுக்காக தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் கட்டிடமொன்றை நிறுவுதல்.

ஆகிய பிரதான திட்டங்களை முன்வைத்து துரிதமாக இயங்க உள்ளது. இதற்காக  பொதுமக்கள் ,பள்ளிவாயில்கள் , நிறுவனங்கள் அரசியல் தலைமைகள் ஆகிய சமூகத்தின் அனைத்துமட்ட உறுப்பினர்களும் முன்வந்து ஒத்துழைப்பை நல்க வேண்டும் “ என்றும் கூறினார் .
இந்தக் கூட்டத்தின் இறுதியில் “ U C M C ஜனாஸா தொண்டர் அணி”
 ( UCMC JANAZA VOLUNTEERS) யில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப் பட்டன. இவ்வணியில் இணைவதற்காக அநேகமான விண்ணப்பங்கள் உடனடியாகவே பூர்த்தி செய்து கையளிக்கப் பட்டது. இவ்விடயம் சம்பந்தமாக வருகைதந்திருந்த அனைவருமே ஆதரவு தெரிவித்து கருத்துக் கூறியமை குறிப்பிடத் தக்கதாகும்.    


பதுளை மா நகருக்கு அவசர தேவையாகவுள்ள ஜனாசா நலன்புரி சேவையை மலையக முஸ்லிம் கவுன்சில் துரிதமாக முன்னெடுக்கும் i பதுளை மா நகருக்கு அவசர தேவையாகவுள்ள ஜனாசா நலன்புரி சேவையை மலையக முஸ்லிம் கவுன்சில் துரிதமாக முன்னெடுக்கும் i Reviewed by Madawala News on 11/04/2016 09:33:00 PM Rating: 5