மடவளை மதீனா ஜின்னா சேர் ஓய்வு பெற்றார்.



- ஜே.எம்.ஹபீஸ்-

மடவளை பஸார்  மதீனா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்களில் ஒருவரான வடமத்திய மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் எஸ்.எம்.அலி ஜின்னா 39 வருட ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.


இவர் 1984ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தை முடித்துக் கொண்ட  பட்டதாரியாக இருந்ததுடன்  அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியல் பயிற்றப்பட்ட சமூகக் கல்வி ஆசிரியருமாவார்.

இவர் சிறிது காலம் தேசிய கல்வி நிறுவகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பாடநெறியில் பகுதி நேரப் பதவிகளிலும் கடமையாற்றியுள்ளார்.
பொலன்னருவை மானிக்கம்பிட்டி முஸ்லிம் வித்தியாலயம்,

பொலன்னருவை பள்ளித் திடல் முஸ்லிம் வித்தியாலயம், பொலன்னருவை திவுலான அல்அக்சா வித்தியாலயம் போன்ற வற்றில் உதவி ஆசிரியராகக் கடமை யாற்றியுள்ளதுடன் இறுதியாக  இவர் மடவளை மதீனா மத்திய கல்லூரியில் பதில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

மடவளை மதீனா ஜின்னா சேர் ஓய்வு பெற்றார். மடவளை மதீனா ஜின்னா சேர் ஓய்வு பெற்றார். Reviewed by Madawala News on 11/09/2016 08:12:00 PM Rating: 5