கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு நிலைமை...



கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (18) மாலை நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதனை தவிர்க்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களிப்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது வாக்களிக்க மாட்டார்கள் எனவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார் எனவும் கூறப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள மற்றும் வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்க திட்டமிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேரும் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும் இன்றைய தினம் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு நிலைமை... கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு நிலைமை... Reviewed by Madawala News on 11/18/2016 09:48:00 AM Rating: 5