கடும்போக்காளர்களின் ஆர்பாட்டம் கண்டியில்..


சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை அரசின் இனத்துவ விரோதச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான மத வன்முறைகள் உள்ளன.

யுத்தம் முடிவுற்ற நிலையில் நாட்டில் இனத்துவ மத அடிப்படைவாதத்தினை முன்னிறுத்தி பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற பல அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.

இவ்வமைப்புக்களுக்கு அரசின் தொடர்ச்சியான ஆதரவு இருந்துவருவதும் நாட்டின் இன ஐக்கியத்திற்கு ஊறுவிளைவிற்கும் செயற்பாடுகளில் அவை முனைப்புக் காட்டுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

மத ரீதியான சுதந்திரத்திற்கு இலங்கையின் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளபோதிலும், சிறுபான்மை சமுகங்கள் தமது மத சுதந்திரத்தினை அனுபவிப்பதில் அண்மைக்காலமாக பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

மத ரீதியான அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொறுப்புள்ள ஜனநாயக அரசாங்கம் ஒன்று பாராமுகமாக இருப்பது சிறுபான்மையினர் மீதான அரசின் இன ஒடுக்குதல் கொள்கையினை நன்கு வெளிப்படுத்துகின்றது.

பௌத்த பேரினவாதம் காலத்திற்கு காலம் மத ரீதியாக விடுக்கும் சவால்கள் இந்நாட்டின் ஐக்கியத்தினை சீர்குலைத்துள்ளதுடன், சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தினையும் எதிர்கால இருப்புக் குறித்த கேள்வியினையும் எழுப்புகின்றது.

இலங்கை  முழுவதிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் தற்சமயம் பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் குறித்த பிரதேசங்களில் இயல்புநிலையினைப் பாதித்துள்ளதுடன், மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்வதற்கும் வழிவிட்டுள்ளது.

தர்கா  நகர்  பள்ளிவாசல்கள், வியாபரத் தளங்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இத்தாக்குதல்களில் இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளதுடன் 80 இற்கு மேற்பட்டோர் பாடுகாயமடைந்துள்ளனர். 

ஜனாதிபதி  மைத்ரிபால  சிரிசேன  இனவாதத்தை  தூண்டும
  அனைத்து  நடவடிக்கைகளையும்  முடக்குமாறு  பொலிஸாரிடம்  அதிரடி  நடவடிக்கை  பின்னர்  கண்டியில்  அனைத்து  இன சிங்கள  அமைப்புக்களும்  சேர்ந்து  முஸ்லீங்களுக்கு  எதிராக  நடத்தி  வரும்  இந்த  ஆர்பாட்டத்தை  கை  கட்டி  பார்ப்பது  கண்டி  சூழவுள்ள  முஸ்லீங்களுக்கு  எதிராக 
அசம்பாவிதங்கள் நிகழ்வதற்குக் காரணமாக  அமையுமா  என  அச்சங்களை  தோற்றுவித்துள்ளன  

குறித்த அமைப்புக்கள் பொதுக் கூட்டம் மற்றும் ஊர்வலத்தை கண்டி  நகரில் நடாத்துவதற்கு பொலிசார் அனுமதியளித்தது நலரலாட்சியின் சட்ட ஒழுங்குச் செயன்முறையில் நம்பிக்கையீனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

போர் முடிந்து ஐந்து வருடங்கள் முடிவுற்ற நிலையில் இவ்வாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கதாகும்.

இம் மனித உரிமை மீறல்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாகச் செயற்படும் மனித உரிமை அமைப்புக்கள் கவனத்தில் எடுத்து இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மனித அவலங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் சமுக அமைப்புக்கள், ஊடகங்கள், கல்வியியலாளர்கள், சட்டவல்லுனர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான குரல்  கொடுக்க  முன்வர  வேண்டும்.

இன்றைய பேரணியில் சுமார் 3000 பேர்வரை கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  
உக்குவெல  அஸ்லாம்  -  கத்தார்
கடும்போக்காளர்களின் ஆர்பாட்டம் கண்டியில்.. கடும்போக்காளர்களின் ஆர்பாட்டம்  கண்டியில்.. Reviewed by Madawala News on 11/19/2016 05:50:00 PM Rating: 5