Ad Space Available here

(வீடியோ) கல்குடா முஸ்லிம்களின் பூர்வீகத்தை உறுதிப்படுத்தும் அக்குறாணை கப்றடி.ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 கல்குடா முஸ்லிம்களின் பூர்வீகத்தை உறுதிப்படுத்தும் அக்குறாணை அவ்லியாவின் கப்ர்ஸ்த்தானம். சாட்டோ வை.எல்.மன்சூர்
வீடியோ அவ்லியாவின் கப்றடியும் அண்டிய பிரதேசமும்:-


மட்டக்களப்பு கல்குடா தொகுதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைஇ கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவில் அக்குறாணை என்ற கிராமத்தில் அமைய பெற்றுள்ள அக்குறாணை பெத்தா என்று அழைக்கப்படும் அவ்லியாவின் கப்ர்ஸ்த்தானமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் இருந்து பரந்து பட்டு முஸ்லிம்கள் வாழ்துள்ளமைகான சாட்சியாகவும் முஸ்லிம்கள் யுத்தகாலத்தில் இழந்துள்ள தங்களினுடைய பூர்வீக நிரந்த குடியிருப்பு காணிகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.


இவ்வாறு முஸ்லிம்களின் வரலாற்றினை பறைசாற்றுவதாகவும்இ பூர்வீக காணிகளை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சான்றாக இருக்கின்ற அக்குறாணை பெத்தாவினுடைய கப்ர்ஸ்த்தானம் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் மக்கள் மீள் குடியேறாமல் இருப்பதற்கும் அங்கு பள்ளிவாயல்இ குர்ஆன் மத்ரசா போன்றவைகள் யுத்தம் முடிவுற்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலைமையிலும் இல்லாமல் இருப்பதற்கு கல்குடா இஸ்லாமிய அமைப்புக்கள்இ உலமா சபைஇ மற்றும் அரசியல்வாதிகள்இ புத்திஜீவிகளினுடைய கவனயீனமே முக்கிய காரணமாக அமையபெற்றுள்ளது மனவேதனை அளிக்க கூடிய விடயமாக உள்ளது..


மேலும் அக்குறாணை பிரதேச முஸ்லிம்களினுடைய வரலாற்றினை பார்க்கின்ற விடத்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வரலாற்றை ஆராய்கின்ற போது இலங்கைக்கு அறாபியர் குடியேறிய காலப்பகுதியிலேயே இங்கும் குடியேறியதை பல வரலாற்று ஆய்வு நூற்களும் இப்னு பதூதா போன்றோரின் பயணக்குறிப்புகளும் குறித்து நிற்கின்றன.

கல்குடாப் பிரதேச முஸ்லிம்கள் பூர்வீக வரலாற்றை ஆராய முற்படுகின்ற போது எக்கால எல்லையில் இப்பிரதேசத்தில் குடியேறினார்கள் என்று திட்டவட்டமாக கூறிச் செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லாத போதும் பன்னெடுங் காலமாக அவர்கள் இங்கு ஜீவனோபாயம் நடாத்தியிருக்க வேண்டும் என குறிப்புகள் தொட்டுச் செல்கின்றன.


மேலும் குறித்த பிரதேசத்தினை கோறளை எனும் பதங்கொண்டே நோக்க வேண்டும். ஏனெனில் ஒல்லாந்தர் மேற்குக் கரையில் ஆட்சி செலுத்திய வேளை கண்டியாட்சிக்குட்பட்ட கிழக்கு கடலோரப்பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்தனர் எனக் குறிப்பிடும் பேராசிரியர் மு.று.குணவர்த்தன மட்டக்களப்பு பிரதேசம் கோறளைப் பிரிவுக்குள் அடக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிடுகிறார்

அத்தோடு நாவுல, மின்னேரிய, அக்குறாணை ஊடாக கல்குடா, மட்டக்களப்பு பிரதேசங்களுடனும் முக்கோண தொடர்புற்று 'தவளம்' வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டது போலவே குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டு சுதேசிகளும், முஸ்லிம்களும் காடு வெட்டிஇ பயிர்ச் செய்கை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

இதனை 'குயிரோஸ்' பாதிரியாரின் குறிப்புகளும்இ 1760இல் கண்டிக்கு விஜயம் செய்த ஆங்கிலேய தூதுவன் 'ஜோன் பைபஸி'ன் குறிப்புகளும் எடுத்துக் காட்டுகின்றன.

கண்டி அரசர்கள் முஸ்லிம்களோடு நல்லுறவு கொண்டிருந்ததனாலும் தமது படைப்பலத்தைப் பெருக்கவும்இ தமது பொது எதிரிகளான ஐரோப்பியரை எதிர்க்கவும் வேண்டி முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் குடியமர்த்தினர். கண்டி மன்னன் செனரத் (கி.பி. 1604 – 1635) கி.பி. 1626யில் 4000 முஸ்லிம்களை குடியமர்த்தினர் என 'குயிறோஸ்' பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இன்னும் வலுச்சேர்க்கும் வகையில் அக்குறாணையார் குடும்பம் (சந்தியாற்றார் குடி) இவர்கள் அக்குரணையிலிருந்து கண்டி மன்னனால் இங்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்களது வருகை தொடர்பாக ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகின்றது. நாவுல ஊடாக பிபிலை, கரவாகு பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்த கண்டிய வியாபாரக் கும்பலை இடைமறித்து கொலை, கொள்ளையில் ஈடுபட்ட சங்கரன் தலைமையிலான சுதேச வேடுவர் கொள்ளைக் கும்பலை அடக்குவதற்கு கண்டி மன்னன் மகுலியார் பிள்ளை விதானையின் மகன் முதலிப்பிள்ளை விதானை தலைமையில் ஒரு குழுவினரை அனுப்பிவைத்தான்..


கண்டி மாவட்ட முஸ்லிம்கள் வரலாற்று நூல் குறிப்பிடுவது போன்று அக்குறாணையில் பலம் வாய்ந்த முஸ்லிம் படையணி கண்டிய அரசனால் குடியமர்த்தப்பட்டிருந்தது. எனவே இவர்களே இக்கலகக்காரர்களை அடக்க பொருத்தமானவர்கள் என கண்டிய அரசன் கருதியிருந்தார். அக்குரணையைச் சேர்ந்தவர்கள் அக்குறாணையில் குடியமர்ந்ததால் ஆரம்பத்தில் சின்ன அக்குறணை என்ற பெயரே சின்ன அக்குறாணை என மருவலாயிற்று.
பின்னர் இவர்கள் புணாணை, ஊர்முனைத்திடல் (தற்போதைய வாகனேரிக் குளப்பகுதி) போன்ற நீர்நிலைகளை நோக்கி நகரலாயினர்.வனவிலங்குகளின் தொல்லையும்இ துறைமுக வசதியும் ஓட்டமாவடி துறை (தற்போதைய காயித நகர்ப்பகுதி)யை நோக்கி நகரச் செய்தது.மீண்டும் அவர்கள் மாதுறு ஓயா கிளையாற்றைக் கடந்து வெள்ளமாவடி துறையூடாக ஓடக்கரை(பதுறியா-மாஞ்சோலை-மீராவோடை)இ ஓட்டமாவடி பிரதேசங்களில் குடியேறியுள்ளனர்.

இவ்வாறு அழிக்க முடியாத பூர்வீக வரலாற்றினை கொண்ட அக்குறாணையில் வாழ்ந்தஇ விவசாயம் செய்துவாழும் கல்குடா முஸ்லிம் மக்கள் தங்களது பூர்வீக நிலப்பரப்பில் நிரந்தரமாக குடியேறி இந்த நாட்டில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியின் சுவாச காற்றினை சுவாசிப்பதற்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகளும்இ அரச நிருவாகிகளும்,
 இலங்கை தமிழர்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற புலம்பெயர் தமிழ் சமூகமும், அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் உட்பட அனைவரும் பக்கசார்பின்றி ஒத்துழைத்து குறித்த அக்குறாணை பிரதேச நிரந்த குடியிருப்புக்களை உறுதி செய்யுமாறு குறித்த பிரதேசத்து முஸ்லிம் மக்கள் தயவாய் வேண்டிக்கொள்கின்றனர்.
(வீடியோ) கல்குடா முஸ்லிம்களின் பூர்வீகத்தை உறுதிப்படுத்தும் அக்குறாணை கப்றடி. (வீடியோ) கல்குடா முஸ்லிம்களின் பூர்வீகத்தை உறுதிப்படுத்தும் அக்குறாணை கப்றடி. Reviewed by Madawala News on 11/27/2016 05:09:00 PM Rating: 5