Free Space

( துண்டுப்பிரசுரம் இணைப்பு) நோலிமிட், பேஷன் பக், எடிசலாட்டில் பொருள் வாங்க வேண்டாம்... பள்ளி வீதி பதாகை உடைக்கபட்டது.



பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக  அனைத்து சிங்கள அமைப்புகளையும் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டு இன்று நண்பகல் 2 மணிக்கு கண்டி கெடம்பே மைதானத்தில்  ஒன்று கூடலும், அங்கிருந்து  ஊர்வலமாக கண்டி தலதா மாளிகை நோக்கி சுமார் மூவாயிரம் பேர்வரை பேரணியாக வந்தனர்.

பொதுபலசேனா, சிங்கலே , சிங்கலே ஜாதிக பலமுழுவ,சிங்கள ராவய, ராவனா பலய உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த பேரணியில்  அரசுக்கும், அமைப்புகளுக்கும் எதிராக கோஷங்களையும், பதாகைகளையும் ஏந்தி வந்த நிலையில் தலதா மாளிகையை அடைந்து உரைகளை தற்போதும்  நிகழ்த்தி வருகின்றனர். ( இலங்கை  நேரம் இரவு 8) அத்துடன் குறிப்பிட்ட பேரணி மல்வத்த நோக்கி செல்லும் வேளையில்  பள்ளி வீதி யின் தொடக்கத்தில் உள்ள பெயர்ப்பலகையை உடைத்து சென்றுள்ளதாகவும், போலீசார் பொதுமக்கள்  பாதுகாப்புக்காக களத்தில் இறங்கி உள்ளதாகவும்,தெரிவிக்கபடுகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட பேரணியில் விநியோகிக்கபட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று எமக்கு கிடைத்தது..

அனகாரிக்க தர்மபால புகைப்படத்துடன் காணப்படும் அந்த துண்டுப்பிரசுரத்தில் ..

"கண்ணை திறங்கள்... அன்று அனகாரிக்க தர்மபால சொன்னது இன்று நடைபெறுகிறது" என்ற தலைப்பில் தொடங்கி அன்று கூறிய சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பிரசுரித்து, இன்று அவை நடைபெறுவதாக விடயங்களை திரிவு படுத்தி எழுதி உள்ளார்கள்.

அத்துடன் பெளத்தர்களுக்கு சொந்தமான இடங்களை முஸ்லிம்கள் பணத்தின் மூலம் கைப்பற்றி உள்ளதாகவும்,  நாம் சிங்களவர்கள் அவர்களின் கடையில் வாங்கும் ஒவ்வொரு 100 ரூபாவின்  பொருளுக்கும் 2 . 50 ரூபா முஸ்லிம்களின் சமய விடயங்களுக்கும் , பெளத்தத்தை அழிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களில் பொருட்கள் வாங்க வேண்டாம் எனவும் நோலிமிட், பேஷன் பக், எடிசலாத் போன்றவற்றின் லோகோக்களையும் பிரசுரித்து உள்ளனர்.

( துண்டுப்பிரசுரம் இணைப்பு) நோலிமிட், பேஷன் பக், எடிசலாட்டில் பொருள் வாங்க வேண்டாம்... பள்ளி வீதி பதாகை உடைக்கபட்டது. ( துண்டுப்பிரசுரம் இணைப்பு) நோலிமிட், பேஷன் பக், எடிசலாட்டில் பொருள் வாங்க வேண்டாம்... பள்ளி வீதி பதாகை உடைக்கபட்டது. Reviewed by Madawala News on 11/19/2016 08:07:00 PM Rating: 5