Accaddemy

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் மரணம் .



சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் காலமாகியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன்ஞீவனி இந்திரா ஜயசூரிய லண்டனில் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 40

செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான அவர், பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.

அவர் பல முன்னணி நிதி நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவு சிரேஷ்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

இவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் இரு குழந்தைகளின் தாயாவார்.

அவரது மரண சடங்குகள் லண்டனில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் மரணம் . சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் மரணம் . Reviewed by Madawala News on 11/02/2016 09:55:00 PM Rating: 5