Free Space

காத்தான்குடி ஜாமியுள் ஆபிரீன் பாடசாலைக்கு இணை்டு கோடி ரூபா செலவில் மாடிக்கட்டடம்.



எம்.ரீ. ஹைதர் அலி

கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் நசீர் அஹமட் அவர்களினால் கிழக்கு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டிலிருந்து இரண்டு கோடி ரூபா செலவில் காத்தான்குடி ஜாமியுள் ஆபிரீன் பாடசாலைக்கு புதிதாக இரண்டு மாடிக்கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் Z.A. நசீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறூக் அவர்களும் ஏனைய அததிகிளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M.T.A. நிசாம், மட்டக் களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் M.I. சேகு அலி மறறும் நகர திட்டமிடல் நீர் சழங்கல் அமைச்சின் இணைப்பாளர் U.L.M.N. முபீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

இந்த பாடசாலைக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளவாங்கப்பட்டிருந்த போதும் துரதிஸ்டவசமாக அந்த பட்டியலிலிருந்து அது நீக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் எவ்வாறாயினும் இப்பாடசாலைக்குரிய கட்டடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அடிப்படையில் நாங்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கௌரவ. முதலமைச்சர் அவர்கள் இக்கட்டடத்தினை பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் பூரணப்படுத்தப்படாத இப்பாடசாலையின் கட்டிடம் ஒன்றினையும் பூரணப்படுத்துவதற்கான நிதியினை ஒதுக்கி வழங்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலும் இப்பாடசாலைக்கு முன்னுள்ள ஆற்றங்கரை பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக அதிக துர்நாற்றம் மற்றும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை இப்பாடசாலை மாணவர்கள் எதிர்கொண்டிருந்தனர். இப்பிரச்சனையினை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொண்ட முயற்சியின் பலனாக அண்மையில் ஏறாவூர் பற்று பிரதேசத்தின் கொடுவாமடு என்னும் இடத்தில் மாவட்டத்தின் அனைத்து குப்பைகளையும் சேகரித்து மீள் சுழற்சி செய்வதற்கான இடமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போதுள்ள முதலமைச்சர் தலைமையிலான எமது கிழக்கு மாகாண சபை மூலம் பாடசாலைக்களுக்கு தேவையான பௌதீக வளம், ஆசிரியர் மற்றும் ஆளணி, தனிப்பட்ட பிரச்சினைகள் போன்ற அனைத்து விடயங்களுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக சிறந்த கல்வியுடன் கூடிய எதிர்கால சமூகம் ஒன்றை உருவாக்குவோம் என தெரிவித்தார்.  
காத்தான்குடி ஜாமியுள் ஆபிரீன் பாடசாலைக்கு இணை்டு கோடி ரூபா செலவில் மாடிக்கட்டடம். காத்தான்குடி ஜாமியுள் ஆபிரீன் பாடசாலைக்கு இணை்டு கோடி ரூபா செலவில் மாடிக்கட்டடம். Reviewed by Madawala News on 11/18/2016 08:32:00 AM Rating: 5