Accaddemy

ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ 876 விமானச் சேவைகள் இன்று ரத்து .



ஐரோப்பா மற்றும் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஜெர்மனியில் மட்டும் சுமார் 5400 பேர் விமானிகளாக (பைலட்) வேலை செய்கின்றனர்.

தங்களது சம்பளத்தை உயர்த்தித்தர வேண்டும் என இவர்கள் முன்வைத்த கோரிக்கையை லுப்தான்ஸா நிர்வாகம் கண்டுகொள்ளாதததால் பலகட்ட போரட்டங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.


இன்றுகாலை முதல் ஐயாயிரத்துக்கும் அதிகமான விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்விளைவாக தங்களது நிறுவனத்தின் 876 விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக லுப்தான்ஸா நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய வேலைநிறுத்தத்தால் இந்நிறுவனத்துக்கு சொந்தமான யூரோவிங்ஸ், ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ், சுவிஸ் மற்றும் ப்ருசெல்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்படாது என லுப்தான்ஸா நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

H B றிஸ்வானுஸ் ஸமான்   கொழும்பு.

ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ 876 விமானச் சேவைகள் இன்று ரத்து . ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ 876 விமானச் சேவைகள் இன்று ரத்து . Reviewed by Madawala News on 11/23/2016 01:23:00 PM Rating: 5