Kidny

Kidny

முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமைக்காக பாராளுமன் ஜே வி பீயின் குரல். m

முஸ்லிம் விவாக சட்டத்தின் பிரகாரம் 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி உள்ளது. எனவே, ஒவ்வொரு முஸ்லிம் மாணவியின் கல்வியிலும் உரிமையை 18 வயது வரைக்கும் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. 

இன்று பாராளுமனறத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமனற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமனற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க,

முஸ்லிம் பெண்கள் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயின்றால் மாத்திரமே முஸ்லிம் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்.

எனவே நாட்டில் வாழும் சிறுமிகள் அனைவருக்கும் 18 வயது வரைக்கும் கல்வியை வழங்குவது கல்வி அமைச்சரின் பொறுப்பாகும். எனவே அமைச்சர் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமனற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். DC

முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமைக்காக பாராளுமன் ஜே வி பீயின் குரல். m முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமைக்காக பாராளுமன் ஜே வி பீயின் குரல். m Reviewed by Madawala News on 11/22/2016 05:01:00 PM Rating: 5