Kidny

Kidny

மஹிந்தவிடமிருந்து விடுதலை பெற்று, மைத்திரி – ரணிலிடம் சிக்கியுள்ளோம்.மஹிந்த ராஜபக் ஷவின் கூட்­ட­ணியில் இருந்து விடு­தலை பெற்று மைத்­திரி- – ரணில் கூட்­ட­ணி­யிடம் சிக்­கிக்­கொண்­டுள்ளோம். ஊழல் மோசடிக்கா­ரர்­களின் கரங்­களில் இருந்து விடு­பட ஜன­நா­யக மாற்றம்  ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும். 2020 ஜனா­தி­பதி தேர்­தலை இலக்கு வைத்து அதற்கு ஏற்ற வகையில் மக்கள் விடு­தலை முன்­னணி செயற்­பட ஆரம்­பித்து விட்­டது.

மாற்றம் ஒன்று ஏற்­படும் அடை­யாளம் தெரி­கின்­றது. அதற்கு மக்கள் அனை­வரும் எம்முடன் கைகோர்த்து நாட்டை மாற்று வழியில் திருப்ப வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக குறிப்­பிட்டார்.

27வது கார்த்­திகை வீரர்கள் தினம் நேற்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மையில் கொழும்பு விகா­ர­ம­கா­தேவி திறந்­த­வெ­ளி­ய­ரங்கில் நடை­பெற்­றது. இதில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இன்று நாட்டில் மக்கள் ஏற்­ப­டுத்­திய மாற்றம் விரும்­பத்­தக்­கதா அல்­லது அர்த்­த­முள்­ளதா என கேட்டால் எவ­ருக்கும் மாற்­றத்தில் திருப்­தி­யில்லை என்றே கூற­வேண்டும். கடந்த பத்து ஆண்­டு­க­ளாக மக்கள் அனு­ப­வித்த கொடு­மைகள், மனித உரிமை மீறல்கள், அடக்­கு­மு­றைகள், பொரு­ளா­தார சுமைகள், மக்­களின் பணம் கொள்­ளைகள் முழு­மை­யாக நிறுத்­தப்­படும் என நம்­பிக்கை வைத்தே மக்கள் மாற்றம் ஒன்றை மேற்­கொண்­டனர்.

ஆனால் ஏற்­ப­டுத்­திய மாற்றம் இன்று மக்­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் இல்லை. கடந்த காலத்தில் கோடிக்­க­ணக்கில் கொள்­ளை­ய­டித்த கொள்­ளை­யர்­க­ளையும், கொலை­கா­ரர்­க­ளையும் கைகோர்த்து அவர்­களை பாது­காக்­கவே இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­துள்­ளது. ஜன­நா­யகம், நல்­லாட்சி என்ற கதை­களை கூறிக்­கொண்டு எம் அனை­வ­ரையும் ஏமாற்­றி­விட்டு குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­றவும், புதி­தாக அர­சாங்­கத்தில் உரு­வாக்­கி­வரும் கொல்­லைக்­கா­ரர்­க­ளுக்கு வாய்ப்­பு­களை வழங்­க­வுமே நல்­லாட்சி அர­சாங்கம் வந்­துள்­ளது.

ஆகவே நாட்டில் மாற்றம் ஒன்று வேண்டும். அந்த மாற்றம் இலங்­கையில் சகல மக்­க­ளையும் பாது­காக்கும் வகையில் அமைய வேண்டும். பொரு­ளா­தார ரீதி­யிலும் , சமூக கட்­ட­மைப்­பிலும் மாற்­றத்தை கொண்­டு­வர வேண்டும். அவ்­வாறு நாட்டை மீட்­டெ­டுக்க வேண்டும் என்றால் மாற்­று­வழி ஒன்று வேண்டும். அப்­ப­டி­யென்றால் அதை யார் செய்­வது. மஹிந்த ராஜபக் ஷவினால் அதை செய்ய முடி­யாது. அவர்கள் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட குழு­வினர்.

 இன்று அவர்கள் மக்­களை ஏமாற்றி அதன் மூலம் மீண்டும் தங்­களை நிலை­நி­றுத்த முயட்­சி­கின்­றனர். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ குழு­வி­னரால் மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்க முடி­யாது. அவர்கள் செய்த மோச­டிகள், குற்­றங்கள் அனைத்­தையும் மக்கள் மறக்க மாட்­டார்கள்.

அதேபோல் இப்­போது கூட்­டணி சேர்ந்­துள்ள மைத்­திரி ரணில் குழு­வினர் இதை செய்­வார்­களா என்று கேள்வி எழுப்­பினால் அதற்கும் விடை இல்லை. இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததும் மத்­திய வங்­கியில் இருந்து மக்­களின் பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. அரச நிறு­வகம் முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. பாட்­டாளி வர்க்கம் முழு­மை­யாக முடக்­கப்­பட்டு முத­லா­ளித்­துவ சர்­வா­தி­காரம் தலை­தூக்­கி­விட்­டது. அபி­வி­ருத்தி முடக்­கப்­பட்­டு­விட்­டது.

நிலங்கள் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு விற்­கப்­பட்டு வரு­கின்­றது. வடக்கில் மக்­க­ளுக்கு நிலங்கள் வழங்­கப்­பட யோசிக்கும் அர­சாங்கம் சீனா­வுக்கும், இந்­தி­யா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் நிலங்­களை கொடுத்து நாட்டை விற்று வரு­கின்­றது. இந்த நிலை­மையை மக்கள் விரும்­ப­வில்லை. ஆகவே அடுத்து ஏற்­ப­டுத்தும் மாற்றம் மக்கள் மாற்­ற­மாக உரு­வாக்­கப்­பட வேண்டும்.

கடந்த காலத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி பாரிய அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுத்­தது. கட்­சியை பிள­வு­ப­டுத்த சிலர் முயட்­சி­தனர். சிலர் கட்­சியை விட்டு வெளி­யே­றினர். கட்­சியின் மீது இருந்த நம்­பிக்கை சற்று குறைந்­தது. ஆனால் மக்கள் விடு­தலை முன்­னணி மீண்டும் முன்­வந்­துள்­ளது. அனைத்து தரப்­பையும் உள்­ள­டக்­கிய பல­மான கட்­சி­யாக உரு­வா­கி­யுள்­ளது. அடுத்த பய­ணத்­துக்­கான சகல ஆய­தங்­க­ளையும் நாம் முன்­னெ­டுத்து விட்டோம்.

 எமக்கு எதி­ராக குற்றம் முவைப்­ப­வர்கள் அதை நிரு­பிக்க முடி­யாது தவிக்­கின்­றனர். ராஜபக் ஷக்­களின் கள­வு­க­ளுக்கு பழ­கி­ன­வர்கள், ரணில் விக்­ர­ம­சிங்­கவின் எலும்புத் துண்­டு­க­ளுக்கு ஆசைப்­பட்­ட­வர்கள் எமக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிக்கை வைக்­கின்­றனர். ஆனால் இரு­தியில் அவர்­களே குற்­ற­வா­ளி­க­ளாக மாறி­வ­ரு­கின்­றனர். எம்மை விமர்­சிக்க எவ­ருக்கும் தகு­தியும் இல்லை, அவர்கள் எவரும் தூய­மை­ய­ன­வர்­களும் இல்லை. மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு எதி­ராக ஏதேனும் ஒரு குற்­றத்தி நிரு­பிக்க முடி­யாது. நாம் மக்­க­ளுக்­கான செயற்­படும் மக்­க­ளுடன் இணைந்து கஷ்­டப்­படும் நபர்கள்.

2020 ஜனா­தி­பதி தேர்­தலை இலக்கு வைத்து அதற்கு ஏற்ற வகையில் மக்கள் விடு­தலை முன்­னணி செயற்­பட ஆரம்­பித்து விட்­டது. பல்­க­லை­க­ழக கற்ற சமூ­கத்­துடன் கைகோர்த்தும், ஊட­கங்­க­ளு­டனும் கைகோர்த்து அத­னூ­டாக மக்­களை சென்­ற­டையும் வகையில் மக்கள் விடு­தலை முன்­னனி செயற்­பட்டு வரு­கின்­றது. எமது அரச சேவை­களை, எமது பொரு­ளா­தார நிபு­ணர்­களை, எமது சூழ­லியல் ஆய்­வா­ளர்கள், எமது விவ­சா­யிகள் அனை­வ­ரையும் இலக்கு வைத்து மிகச்­ச­ரி­யான நகர்­வு­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

அதேபோல் எமது இளம் சமூ­கத்தை எம்­முடன் இணைத்து அதன் மூல­மாக நாட்டை வேறு திசைக்கு மாற்ற மக்கள் விடு­தலை முன்­னனி தயா­ராகி வரு­கின்­றது. இந்த அனைத்­தையும் ஒன்­றி­ணைத்து மக்கள் கூட்­டணி ஒன்றை உரு­வாக்கி வரு­கின்­றது. நாம் இன்று அணைத்து மக்­க­ளையும் சந்­தித்து வரு­கின்றோம். அவர்­களின் கருத்­துக்­களை ஆராய்ந்து வரு­கின்றோம்.

ஆகவே மக்கள் இப்­போது யாருக்கு தலை­மைத்­துவம் கொடுக்க வேண்டும். இந்த நாட்டில் கூட்­டணி அமைத்து வரும் ரணில் மைத்­திரி போன்­ற­வ­ருக்கா. இவர்­களின் காலத்தை நிறை­வுக்கு கொண்­டு­வர வேண்டும். மக்கள் யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதை சிந்­திக்க வேண்டும். மக்­களை சுமைக்குள் தள்ளும் ரணில் மைத்­திரி கூட்­ட­ணிக்கா. இவர்கள் மூன்று மாதம் ஒதுங்கிக் கொண்டால் நாடு இப்­போது இருக்கும் நிலையை விடவும் நல்ல நிலைக்கு வரும்.

 ஆகவே அனைத்து கிராமங்களைளும் சிவப்புக் கொடிகளை பலப்படுத்துவது எமது இலக்கு. 2020 இல் எமது கைகள் பலபடையும் வகையில் மக்கள் கைகோர்க்க வேண்டும். புரட்சி இல்லாத, சமவுடமை இல்லாமல் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆகவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சிக்கு மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும். அந்த மாற்றம் ஏற்படும் அடையாளம் தெரிகின்றது. அதற்கு மக்கள் அனைவரும் மக்களுடன் கைகோர்த்து நாட்டை மாற்று வழியில் திருப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மஹிந்தவிடமிருந்து விடுதலை பெற்று, மைத்திரி – ரணிலிடம் சிக்கியுள்ளோம். மஹிந்தவிடமிருந்து விடுதலை பெற்று, மைத்திரி – ரணிலிடம் சிக்கியுள்ளோம். Reviewed by Madawala News on 11/14/2016 10:53:00 AM Rating: 5