Ad Space Available here

“ஊ...” சத்தமிட்ட நரிகளுக்கு மேர்வின் சில்வாவின் பதில்..



தனக்கு எதிராக “ஊ...” சத்தமிட்ட நரிகள் ராஜபக்சவினரின் மடியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் நேற்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

டி.ஏ. ராஜபக்சவின் நினைவு நிகழ்வுக்கு வந்த சில நரிகள் சத்தமிட்டனர்.

எனினும் நான் சிங்கங்களுடன் இருக்கின்றேன். கிடைத்த அழைப்புக்கு அமையவே நான் அந்த நிகழ்வுக்கு சென்றேன். மிகவும் மதிக்கத்தக்க ஒருவருக்காக ஒழுங்கு செய்த நிகழ்வு என்ற காரணத்தினால் அங்கு நான் சென்றேன்.

கீதாஞ்சன குணவர்தன அங்கிருந்தார். எங்கள இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சமல் ராஜபக்சவும் நானும் நன்றாக பேசிக்கொண்டோம்.

நிகழ்வுக்கு வந்திருந்த சில நரிகள் சத்தமிட்டனர். இந்த நரிகளே மகிந்த ராஜபக்சவை அழித்தனர். இதனால், நான் தற்போது அந்த நரிகளுடன் இல்லை சிங்கங்களுடன் இருக்கின்றேன்.

வணங்க வேண்டியவர்களை வணங்க சென்ற போது கூட்டு எதிர்க்கட்சியினர் இப்படி செய்வார்கள் என்றால், அவர்கள் பின்னால், சென்று சிக்கலில் விழ வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேர்வின் சில்வா டி.ஏ. ராஜபக்ச நினைவு நிகழ்வு சென்றிருந்த போது, அங்கிருந்தவர்கள் அவருக்கு எதிராக ஊ சத்தமிட்டதுடன் பதிலுக்கு மேர்வின் சில்வாவும் ஊ என சத்தமிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
“ஊ...” சத்தமிட்ட நரிகளுக்கு மேர்வின் சில்வாவின் பதில்..  “ஊ...” சத்தமிட்ட நரிகளுக்கு மேர்வின் சில்வாவின் பதில்.. Reviewed by Madawala News on 11/19/2016 02:02:00 PM Rating: 5