மோடி அதிரடியால் இப்படியும் ஒரு அறிவிப்பு..... கலிகாலம்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

இந்தியாவில்  பயன்பாட்டில் உள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று இந்திய அரசாங்கம் அறிவித்ததை அடுத்து கையில் இருக்கும் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு இந்திய மக்கள் தவியாய்த் தவித்து வருகின்றனர். தானியக்க வங்கி இயந்திரங்கள் (ஏடிஎம்) நேற்றிலிருந்து திறக்கப்படும் என்று அறிவித்து இருந்ததால் அதிகாலையில் இருந்தே அந்த மையங்களில் பொதுமக்கள் வரிசை பிடித்துக் காத்திருந்தனர்.

வழக்கமாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அடுக்கப்பட்டால் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 1  20 லட்ச ரூபாயை வைக்க முடியும் என்றும் இப்போது 50, 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே அடுக்குவதால் ஓர் இயந்திரத்தில் ரூ.2 லட்சம் மட்டுமே வைக்கமுடிகிறது என்றும் சொன்னார் ஏடிஎம் இயந்திர ரொக்க நிர்வாக நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி. இதனால் ஏடிஎம் இயந்திரம் ஒன்றின் கொள்திறன் 10% அளவுக்குக் குறைந்துவிடுகிறது.

அவ்வியந்திரங்களில் நிரப் பப்படும் பணமும் உட னுக்குடன் காலியாகி விடுகிறது. அத்துடன், ஏராளமான ஏடிஎம் மையங்கள் நேற்றும் மூடப்பட்டு இருந்த தால் ஏழை, நடுத்தர மக்கள் அன்றாடச் செலவுக்குக்கூட பணமில்லாது திண்டாடி, புலம்பி வருகின்றனர். மேலும், 50,000 ஏடிஎம் மையங்களில் இன்னும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளே அப்புறப்படுத்தப்படவில்லை என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி கூறியது.


மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையால் கொல்கத்தாவில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியான சோனாகாச்சியில் பாலியல் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இது தெற்கு ஆசியாவின் புகழ்பெற்ற சிகப்பு விளக்கு பகுதியாகும்.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து அதற்கான மாற்று பணத்தை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெறலாம் என கூறினார். ஆனால் ஒரு வாரத்திற்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் அவர்களின் தொழில் அமோகமாக நடைபெறுவதாக அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் பெறும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக தர்பார் மற்றும் உஷா வங்கிகள் உறுதி அளித்திருப்பதகவும் அந்த பெண்கள் கூறுகின்றனர்.
மோடி அதிரடியால் இப்படியும் ஒரு அறிவிப்பு..... கலிகாலம். மோடி அதிரடியால் இப்படியும் ஒரு அறிவிப்பு..... கலிகாலம். Reviewed by Madawala News on 11/13/2016 01:30:00 PM Rating: 5