Free Space

நடமாடும் சேவை எனும் போர்வையில் கண்துடைப்பு – சுபையிர் MPC


(றியாஸ் ஆதம்)
வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சினால், ஏறாவூரில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை, வெறும் கண்துடைப்பாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டது.

இது  தொடர்பாக, நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஞாயிற்றுக்கிழமை (20) நடத்தப்பட்ட இந்த நடமாடும் சேவையானது, மக்களை ஏமாற்றும் செயலாகவே காணப்பட்டது. இந்டமாடும் சேவை தொடர்பில் மக்களுக்கு சரியான முறையில் முன் அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை..

குறிப்பாக  வெளிநாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 9,500 பேர் தொழில் புரிந்து வருகின்றனர். அதே போன்று ஏறாவூரைச் சேர்ந்த 1,482 பேரும் வெளிநாட்டில் தொழில்  புரிகின்றனர். இவ்வாறு பணிபுரியும் அனைவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பொதுவாக வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு சம்பளம் கிடைக்கப்பெறாமை, அவர்களது தகவல்கள் குடும்பங்களுக்கு கிடைக்காமை, தாய்நாட்டுக்கு திரும்ப முடியாமை, உரிய வேலை கிடைக்காமை, துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றமை மற்றும் கொடுமைப்படுத்தப்படுகின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருபவர்களின் குடும்பங்கள், இதில் கலந்துக்கொண்டு அவர்களது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான வசதிகள் செய்துகொடுத்திருக்கப்படவுமில்லை. இதில் குறித்த சிலரே கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.

எனவே, நடாமடும் சேவை என்ற போர்வையில் மக்களை ஏமாற்றாமல் பொது மக்கள் நன்மையடையும் வகையில் நடமாடும் சேவைகள் நடாத்தப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
நடமாடும் சேவை எனும் போர்வையில் கண்துடைப்பு – சுபையிர் MPC நடமாடும் சேவை எனும் போர்வையில் கண்துடைப்பு – சுபையிர் MPC Reviewed by Madawala News on 11/22/2016 11:15:00 AM Rating: 5