ம­க­ளை­ அ­டித்துக் கொலை செய்த தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு. நீதிவான் ஐ. பயாஸ் ரஸாக் உத்தரவு.



அம்­பாறை, மத்­தி­ய­முகாம் 11ஆம் கொலனி பிர­தே­சத்­தில் ­ம­க­ளை­ அ­டித்துக் கொலை செய்த சந்­தேகநப­ரான தாயாரை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மா­று­கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஐ. பயாஸ் ரஸாக் நேற்று உத்­த­ர­விட்­டுள்ளார்.

கடந்த மே மாதம் தாய்க்கும் மக­ளுக்கும் இடையிலேயே மதம் மாறி­யமை தொடர்பில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பல­கையால் மகள் மீது தாக்­கி­யுள்ளார். இந்­நி­லையில், மகள் சம்­பவ இடத்தில் உயி­ரி­ழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகளின் சட­லத்தை வீட்டின் பின்­பு­றத்தில் கிடங்கு வெட்­டி தாய் புதைத்­துள்­ள­தாக விசா­ர­ணை­யி­லி­ருந்து தெரி­ய­வந்­தது.

தனது வளர்ப்பு மக­ளான செல்­வ­நா­யகம் ஜனனி (வயது 21) என்­ப­வரை அடித்துக் கொலை செய்­து­விட்டு, சட­லத்தை புதைத்த சம்­ப­வத்தை தொடர்ந்து, சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் தாய் (வயது 55) கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

சந்­தேக நபரை நேற்று மீண்டும் கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஐ. பயாஸ் ரஸாக் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ம­க­ளை­ அ­டித்துக் கொலை செய்த தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு. நீதிவான் ஐ. பயாஸ் ரஸாக் உத்தரவு. ம­க­ளை­ அ­டித்துக் கொலை செய்த தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு. நீதிவான் ஐ. பயாஸ் ரஸாக் உத்தரவு. Reviewed by Madawala News on 11/30/2016 11:12:00 AM Rating: 5