Kidny

Kidny

(நேரடி வீடியோ) வாகனேரி உச்சோடக்கல் கப்ர்ஸ்தானம் முஸ்லிம்களின் பூர்வீகம் என்பதற்கு சான்று பகிர்கின்றது..ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ முஸ்லிம்களுக்கு சார்பாக தமிழ் சகோதரர்:-

கல்குடாப் பிரதேச முஸ்லிம்கள் பூர்வீக வரலாற்றை ஆராய முற்படுகின்ற போது எக்கால எல்லையில் இப்பிரதேசத்தில் குடியேறினார்கள் என்று திட்டவட்டமாக கூறிச் செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லாத போதும் பன்னெடுங் காலமாக அவர்கள் இங்கு ஜீவனோபாயம் நடாத்தியிருக்க வேண்டும் என குறிப்புகள் தொட்டுச் செல்கின்றன.


அந்த வகையிலே முஸ்லிம்கள் காலாகாலமாக குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்தமைக்கான சான்றாக வாகனேரி உச்சோடக்கல் நெய்னா முகம்மது வலியுல்லா கப்ர்ஸ்தானம் சான்று பகிர்ந்து நிற்கின்றது.
இதனை மேலும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தும் வகையில் போர் காலத்தில் மட்டுமல்லாது அதற்கு முன்னரும் முஸ்லிம்களுடன் அன்னியொன்னியமாக வாழ்ந்த தமிழ் சகோதரர் எதற்கும் பயமில்லாமல் கூறுகின்ற கருத்துக்களை பார்க்கின்ற பொழுது முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகமும் தேங்காய் பூவும் பிட்டும் போல் வாழ்ந்த சமூகம் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.தற்பொழுது அதனை அண்டிய பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை என்பது வேதனை அளிக்க கூடிய விடயமாக இருக்கின்றது.


மேலும் ஊர்முனைத்திடலில் வசித்த சுதேச வேடுவர்களில் (வாகனேரிக் குளம்) இஸ்லாத்தை தழுவி பின்னர் பள்ளத்திட்டி (பழைய ஹிஜ்ரா நகர் – தற்பொழுது பதுறியா நகர்) யை வந்தடைந்தவர்கள்.இவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கு இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு வந்து மார்க்கப்பிரச்சாரம் செய்த இஸ்லாமியப் பெரியார்களே காரணமாகும். இவர்கள் பற்றி ஒரு தகவலும் குறிப்பிடப்படுகின்றது.


இந்தியாவிலிருந்து சன்மார்க்கப் போதனைக்காக ஏழுபேர் கொண்ட குழு புணாணை, குடியிருப்பட்டை, வாகனேரி, மக்குழடி, குப்பளாந்தவனண, காரையடிப்பட்டி, உச்சோடக்கல் போன்ற இடங்களில் சென்று போதனை புரிந்ததாகும் அவர்கள் மரணித்த பகுதிகளிலேயே அடக்கம் செய்யப்பட்டு ஷியாரம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகள் நீர் நிலைகள் அண்டிய பகுதியாகவுள்ளதால் குடியிருப்புக்களும் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டன.


அது மட்டுமல்லாமல் மஹ்மூத் லெவ்வை விதானை என்பவரின் குடும்பத்தை பற்றி வரலாற்றை பார்க்கின்ற பொழுது  அவர் வாகனேரிக் கண்ட மேற்பார்வையாளராக கடமைபுரிந்தார். இதனால் காட்டுவிதானை என அழைக்கப்பட்டார். இவர் இப்பதவியை பெற ஒரு வரலாற்று நிகழ்வு காரணமாகியது. பிரிட்டிஸாரின் ஆட்சிக்காலப்பகுதியில் மட்டக்களப்பு ஆளுனராகவிருந்த ‘பிறைன்’ துறை (Brain) என்பவர் தனது மனைவியுடன் வாகனேரிக் குளத்திற்கு சென்றிருந்தார்.


தற்செயலாக இவரது மனைவி குளத்தில் வீழ்ந்து முழ்கலானார். அவ்விடத்தில் இருந்த மஹ்மூத் லெவ்வை குளத்தில் குதித்து ‘பிறைனின்’ மனைவியை காப்பாற்றினார். இதற்கு நன்றி செலுத்தும் முகமாக ‘பிறைன்’ மஹ்மூத் லெவ்வைக்கு வன்னியன் (தற்போதைய DRO பதவி –தற்பொழுது பிரதேச செயலாளர்) பதவியுடன் விதானைப் பதவியை பரம்பரைக்கு உரித்தானதாக எழுதிக் கொடுத்தார் பின்னர் இவர் சுகயீனமுற்றபோது ‘வன்னியன் பதவி’ ஓட்டமாவடியைச் சேர்ந்த அஷ்ஷஹீத் புஹாரி விதானையின் தந்தைக்கு கிடைக்கக் கூடியதாகவிருந்தது.


ஆனால் விதானைப் பதவி வழிவந்த பதவியாகையால் மஹ்மூத் லெவ்வையின் மகள் அவ்வா உம்மாவுக்கு ஓரிரு நாட்கள் வழங்கப்பட்ட பின் இவரது சகோதரர் மகனுக்கு இப்பதவி வழங்கப்பட்டது. இதனால் இவர் கூட வெட்டுற ‘காட்டுவிதானையார்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பின்னர் ஏற்பட்ட சில அரசியல் போட்டியும் காழ்ப்புணர்வுகளும் வேறு ஒரு பரம்பரையினருக்கு இப்பதவி சொந்தமானதாக மாறியமைந்தது.


மட்டக்களப்பு கல்குடா தொகுதி கோறளைப்பற்ரு மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிர்வாக பிரிவுகளுக்கு உட்பட்ட வாகனேரி கிரம சேவககர் பிரிவில் உச்சோடகல் கப்ர்ஸ்தானம் அமைந்துள்ள சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் இதுவரை காலமும் மீள் குடியேற்றப்படாமல் இருப்பது கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக அதிகாரிகளின் குரோதமனப்பான்மையா.???

அல்லது அரசியல் தூர நோக்கு சதி திட்டமா??? என்பது பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் கேள்வியும் கவலையுமாக இருக்கின்றது. இதனை அத்திப்பட்டியாக தொடரும் முஸ்லிம்களின் பிரச்சனையாக கருத்தில் கொண்டு தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் தமிழ் தலைமைகளும், அரசாங்க அதிபரும், படித்த நிதானமாய் சிந்திக்க கூடிய தமிழ் புத்தி ஜீவிகளும் குறித்த விடயத்திற்கான விடைகளை தருவார்களா என பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் ஏங்கி தவிக்கிறார்கள்.!!!!!


(நேரடி வீடியோ) வாகனேரி உச்சோடக்கல் கப்ர்ஸ்தானம் முஸ்லிம்களின் பூர்வீகம் என்பதற்கு சான்று பகிர்கின்றது.. (நேரடி வீடியோ) வாகனேரி உச்சோடக்கல் கப்ர்ஸ்தானம் முஸ்லிம்களின் பூர்வீகம் என்பதற்கு சான்று பகிர்கின்றது.. Reviewed by Madawala News on 11/15/2016 09:28:00 AM Rating: 5