இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில், இஸ்லாமிய சட்டம் தேவை.



இலங்கை முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் குர்ஆன் ஹதீஸுக்கு நெருக்கமான ஷரீஆ சட்டம் அமைக்கப்படவேண்டும் என எமது உலமாக்களின் ஒன்றினைந்த இஜ்மாவகும். இதை யாரும் பிழை காணமுடியாது.

 ஆனால் எமது முன்னைய அரசியல் தலைவர்கள் மற்றும் சில உலமாக்கள் முஸ்லிம் விவாக விடயத்தில் திருமன வயதெல்லை 12 அல்லது 13 என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வயதெல்லை இஸ்லாமிய ஷரீஆவுக்கு மாற்றம் என்றால் மத்திரமே மாற்றப்படவேண்டும். மாறாக ஐரோப்பிய யூனியனின் நிபந்தனைகளுக்கோ அல்லது இலங்கையின் BSP+ இன் விருப்பு வெருப்புகளுக்கோ எமது ஷரீஆ சட்டத்தை மாற்றியமைக்க முடியாது. இதுதான் யதார்த்தம்.


கடந்த வாரம் கல்முனையில் மஹ்மூத் பாலிகா மகாவித்தியாலயத்தில் நடைவெற்ற ஒரு நிகழ்வின்  போது slmc தலைவர் கூறுகிறார். " முஸ்லிம்களின் திருமன விவாக தனியார் சட்டத்தில் சற்று நெகிழ்வுத்தன்மையை பேணவேண்டியுள்ளது.

குறிப்பாக மருத்துவ ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் குறைந்த வயதுத் திருமனம் பாதிப்புக்களை கொண்டுள்ள நிலையில், குழந்தைப் பராமரிப்பு மற்றும்   குழந்தையை ஈன்று கொள்வதற்கான தயார் நிலை போன்றவைகளை வைத்து இவற்றைக் கூறினாலும் இன்றைய கால கட்டத்தில்  பாரிய விவரீதங்களை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறோம்".

மேலும் மற்றோரு இடத்தில் கூறுகிறார். " உடன்பாடு கண்ட விடயங்களில் கூட முடிவுக்கு கொண்டு வராமல் சின்னச் சின்ன விவகாரங்களில் பிடிவாதம் பிடிக்கும் நிலையை காண்கிறோம். உதாரணத்திற்கு 16 வயதை திருமன வயதெல்லையாக நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்று பொருத்தப்பாடு வந்த பிறகும் அக்குறிப்பிட்ட வயதெல்லைக்கு கீழ் வயதினருக்கும் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதில் எனக்குக் கூட உடன்பாடில்லை. என கூறியிருப்பது அவரது இஸ்லாமிய அறிவீனத்தை வெளிப்படுத்துகிறது.


பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் உருவாக்கிய slmc கட்சியின் யாப்பில் தலைமைத்துவத்தின் ஒரு சில அதிகாரத்தை குறைக்க இணங்காத தலைமைத்துவம் முஸ்லிம் விவாக விடத்தில் விட்டுக் கொடுபப்பும் நெகிழ்வித்தன்மையும் வேண்டும் என கொக்கரிப்பது வேடிக்கையாகும்.


Slmc ஸ்தாபகர் உருவாக்கிய கட்சியின் யாப்பில் தலைவருக்குறிய அதிகாங்களில் சிலதை மாற்றியமைக்க மேற்கொண்ட முயற்சியே இன்று கட்சி பல கூறுகளாக பிரிந்து சென்றுள்ளமை பிரதான கரங்களில் ஒன்றாகும். நாம் பின்பற்றி ஒழுக இஸ்லாமிய சஷீஆ சட்டம் எமது வாழ்கைக்கு மிகவும் அத்தியாவசிம் ஆகும். இதை நாம் பின்பற்றுவதில் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருக்க வேண்டும்.

இஸ்லாமிய சஷீஆ சட்டத்தில் நெகிழ்வுத்தன்மையோ விட்டுக்கொடுப்போ இருக்க முடியாது. ஆகவே தாங்களின் உடன்பாடு இல்லாவிட்டாலும் எமக்கு ஷரீஆ சட்டம் தாம் முக்கியம்.

Muhammad wafa

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில், இஸ்லாமிய சட்டம் தேவை. இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில், இஸ்லாமிய சட்டம் தேவை. Reviewed by Madawala News on 11/18/2016 09:04:00 PM Rating: 5