ஜனாதிபதி சந்தித்த "விசேட" அதிதி...



ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தை  ஹக் செய்த இளைஞனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று சந்தித்துள்ளார்.

கடந்த  ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி குறித்த இணையத்தளத்தை ஹக் செய்து, இலங்கை இளைஞர்கள் என்ற பெயரில் அடையாளம் காணப்படாத குழுவினர் தகவலொன்றை பதிவிட்டிருந்தனர்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்துவதாகவும் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுப் பெற்றுக்கொடுப்பதாகவும் பிரதமரைப் பற்றியும்  ஹேக்கர் குழுவினர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் (ஊடுருவினார்) செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மொரட்டுவையைச் சேர்ந்த 26 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், கடுகண்ணாவையில் வைத்து 17 வயதுடைய பாடசாலை மாணவனொருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதன்போது குறித்த மாணவனுக்கு விசேட பரிசொன்றையும் ஜனதிபதி வழங்கியுள்ளார்.

மேலும் இந்த மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆசீர்வதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதி சந்தித்த "விசேட" அதிதி... ஜனாதிபதி சந்தித்த "விசேட" அதிதி... Reviewed by Madawala News on 11/17/2016 07:52:00 PM Rating: 5