Free Space

எனது இரண்டாம் வருடப் பூர்த்தியை உற்சவங்கள், களியாட்டங்கள் இன்றி கொண்டாடவும்.



பதவிப் பிரமாணத்தின் இரண்டாம் வருடப் பூர்த்திக் கொண்டாத்தை, உற்சவங்கள், களியாட்டங்கள் இன்றிக் கொண்டாடுமாறு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை (16) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக, மேற்படி அமைச்சரவை முடிவைக் கூறினார்.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாம் வருடப்பூர்த்தி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று கொண்டாடப்படும்.   அதை தேவையற்ற உற்சவங்கள், களியாட்டங்கள் இன்றிக் கொண்டாடவும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளில், துரித கதியில் செயற்படுத்த வேண்டியவற்றை துரித கதியில் ஆரம்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அத்துடன், பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எனது இரண்டாம் வருடப் பூர்த்தியை உற்சவங்கள், களியாட்டங்கள் இன்றி கொண்டாடவும். எனது இரண்டாம் வருடப் பூர்த்தியை உற்சவங்கள், களியாட்டங்கள் இன்றி கொண்டாடவும். Reviewed by Madawala News on 11/17/2016 10:09:00 AM Rating: 5