Accaddemy

நாற்றமெடுக்கும் குப்பையாக மாறிய ஊடகங்கள்.



இலங்­கையின் ஊட­கத்­துறை “நாற்­ற­மெ­டுக்கும் குப்பை” இதுவே ஊட­கத்­து­றையின் சித்­தாந்தம்,பத்­தி­ரி­கை­களின் முன்­பக்­கங்­களில் ஆக்­க­பூர்­வ­மான செய்­தி­களை காண­மு­டி­யாது. அனைத்தும் அழி­வு­பூர்­வ­மான செய்­தி­க­ளையே பிர­சு­ரிக்­கின்­றன என்று ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரிவித்தார்.

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ ஹோட்­டலில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற விஞ்­ஞான ஆய்­வுக்­கான ஜனா­தி­பதி விரு­துகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி,

இலங்­கையின் ஊட­கத்­துறை மிகவும் மோச­மான செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுக்­கின்­றது. நாட்டில் ஆட்­சி­யி­லி­ருக்கும் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்கு புதிய அர­சி­யல்­வா­தி­களை ஆத­ரித்தல் அரசை விமர்­சித்தல் அர­சி­யல்­வா­தி­களை வீழ்த்துதல் என்ற சித்­தாந்­தத்­து­ட­னேயே ஊட­கங்கள் செய­லாற்­று­கின்­றன. உலகில் இவ்­வாறு செயற்­படும் ஊட­கத்­துறை எங்­குமே கிடை­யாது.

எமது நாட்டின் ஊட­கங்கள் நாற்­ற­மெ­டுக்கும் குப்பை. குப்­பை­களை கிள­று­வதும் வடி­கான்­களை தோண்­டு­வ­துமே ஊட­கங்­களின் தொழி­லாக அமைந்­தி­ருக்­கி­றது. காலையில் பத்­தி­ரி­கையை வாசித்தால் அப்­பத்­தி­ரி­கையில் முன்­பக்­கத்தில் பெண்­க­ளுக்­கெ­தி­ரான பாலியல் கொடு­மைகள், கொள்­ளைகள், கொலைகள், குப்­பைகள் என அழி­வுகள் தொடர்­பான செய்­தி­களே பிர­சு­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

இதனை விடுத்து நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் விதத்தில் அபி­வி­ருத்­தி­களை அடிப்­ப­டை­யாக வைத்து எந்­த­வொரு செய்­தியும் பிர­சு­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. பத்­தி­ரி­கையை வாசித்தால் துர்­நாற்றம் எடுக்­கின்­றது. மாண­வர்­களே கல்­வியில் சிறந்து விளங்­க­வேண்டும். விஞ்­ஞான ஆராய்ச்­சிகள் மேன்மை பெற­வேண்டும். அர­சாங்க ஊழி­யர்கள் தமது கட­மை­களை சரி­வரச் செய்­ய­வேண்டும் போன்ற நல்­லு­ப­தே­சங்­களைத் தாங்­கிய செய்­திகள் பிர­சு­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. இவ்­வாறு உலகில் எங்­கு­மில்­லா­த­வாறு அழி­வு­களை முதன்­மைப்­ப­டுத்­தியே இலங்­கையின் ஊட­கத்­துறை செய­லாற்­று­கின்­றது.

எனவே குப்­பைகள் நிறைந்த இலங்­கையின் ஊட­கத்­து­றையை கைவிட்டு நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக எமது பணியை நாம் முன்­னெ­டுப்போம்.

சிறு­நீ­ரக நோயா­ளர்கள்  நாட்டில் இன்று ஒரு வரு­டத்­திற்கு 5000 க்கு மேற்­பட்ட சிறு­நீ­ரக நோயா­ளர்கள் உரு­வெ­டுக்­கின்­றனர். இதனை தடுக்க எமது நாட்டின் கல்­வி­மான்கள், விஞ்­ஞா­னிகள் முன்­வ­ர­வேண்டும்.

ஆனால், இந்நோய் தொடர்­பாக ஆராய்ச்சி நடத்­தி­ய­வர்கள் இன்­னமும் ஒரு நிலைப்­பாட்­டிற்கு, முடி­வுக்கு வர­வில்லை.

இவர்­க­ளுக்கு மத்­தியில் விவா­தங்­களை நடத்திக் கொண்டு முரண்­ப­டு­கின்­றனர். இது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இன்று வரை இதே நிலை தான்.

போதைப்­பொருள்  நாட்டில் பாட­சாலை மாண­வர்கள் உட்­பட சமூ­கத்தில் பலர் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­விட்­டனர். இதனைத் தடுப்­பதை பொலிஸார் தலையில் சுமத்­தி­விட்டு விஞ்­ஞா­னிகள் ,கல்­வி­மான்கள் பாரா­மு­க­மாக இருக்­கின்­றனர். இது மாற­வேண்டும். போதையை ஒழிக்க இவர்­களும் பங்­க­ளிப்புச் செய்­ய­வேண்டும் என்றார்.
நாற்றமெடுக்கும் குப்பையாக மாறிய ஊடகங்கள். நாற்றமெடுக்கும் குப்பையாக மாறிய  ஊடகங்கள். Reviewed by Madawala News on 11/23/2016 11:08:00 AM Rating: 5