இலங்கையர் கைது பற்றிய கட்டார் நாட்டுச் செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை!



கட்டார் நாட்டில் முஹம்மது நபியையும் அல் குர்ஆனையும்   கேலிச்சித்திரம் வரைந்து அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் பெரும்பான்மையின நபர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக நம் நாட்டில் முஸ்லிம்களால் நடாத்தப்படுகின்ற பல்வேறுபட்ட இணையதளங்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக ஒரு செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஒரு சில இணையதளங்கள் நேற்று முதல் பிரதான செய்தியாக வெளியிட்டிருந்த போதிலும் கட்டார் நாட்டு காவல்த்துறையின் மூலமாக இதுவரைக்கும் இத்தகவல் உறுதிப்படுத்தப்படாத அதேவேளை கட்டார் நாட்டின் எந்தவொரு இணையதளங்களிலும் இந்த செய்தி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் தெரிய வருகிறது.
( வெளியிடப்பட்டு இருந்தால் லிங்க் ஐ அனுப்பவும். )

மேலும் இந்த செய்தியானது ஒவ்வொரு இணையதளங்களின் மின்னஞ்சலுக்கும் வெவ்வேறு நபர்களுடைய பெயர்களில் இருந்தும் வித்தியாசமான மின்னஞ்சல் முகவரிகளில் இருந்தும் கிடைக்கபெற்றுள்ளது.

இதன் மூலம் இந்த செய்தியானது 'கட்டார் என்னும் முஸ்லிம் நாட்டில் பெரும்பான்மையினத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக்' கூறி சமகாலத்தில் இலங்கை நாட்டில் சூல் கொண்டு வீசுகின்ற இனவாத சூறாவளியை மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக சீற்றமடைய வைப்பதற்கான ஒரு சதி வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

எனவே இதன் பின்னர் இவ்வாறான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்ற பட்சத்தில் முஸ்லிம் ஊடகங்கள் சற்று நின்று, நிதானித்து ஆதாரங்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னர் நாட்டினுடைய சூழலை கவனத்தில் கொண்டு வெளியிடுவதே ஆரோக்கியமானதாகும்.
இலங்கையர் கைது பற்றிய கட்டார் நாட்டுச் செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை! இலங்கையர் கைது பற்றிய கட்டார் நாட்டுச் செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை! Reviewed by Madawala News on 11/21/2016 12:03:00 PM Rating: 5