Free Space

கைதான முஸ்லிம் நபர், கோத்தாபய ராஜபக்ஷவின் புலனாய்வு மையத்தில் (NIB) செயல்பட்டவர்.



ISIS தொடர்பில் அண்மையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நிகழ்த்திய பாராளுமன்ற உரை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட சலசலப்புக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, இலங்கையில் ISIS ஐ சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும், நாட்டில் இருந்து 32 பேர் வெளியேறி ISIS இல் இணையவில்லை என்றும், இதை ஜனாதிபதியும், புலனாய்வு அறிக்கைகளும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜேதாசவின் கருத்துக்களை அவருக்கு கிடைத்த தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானவை என்று தெரிவித்த அவர், முஸ்லிம் சமூகம் என்றும் தேசிய பாதுகாப்புக்கு பங்களிப்பவர்கள் என்று பாராட்டினார்.

அண்மையில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு இனவாத கருத்துக்களை பேசியதாக கைதான முஸ்லிம் நபர் தொடர்பிலும், தொடர் இனவாத பேச்சுக்களுக்காக சிங்கள இளைஞன் ஒருவர் கைதானமை தொடர்பிலும் இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் அமர்வில் பேசிய அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன,

கைதான முஸ்லிம் நபர் ( Sltj சகோ. ராசிக் )  முன்னைய அரசாங்கத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கண்காணிப்பில் இருந்த தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனராக செயற்பட்டவர் என்றும்,

கைதான சிங்கள இளைஞன், நாமல் ராஜபக்சவின் “நில் பலகாய” (நீலப் படையணி)யை சேர்ந்தவர் என்றும், மஹிந்த ராஜபக்சவுடன் ஊர்வலங்களில் பங்கெடுத்தவர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நிரல்களுக்காக செயற்படுபவர்கள் தொடர்பில் தாம் மிகவும் அவதானமாக இருப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

By Anas Abbas
கைதான முஸ்லிம் நபர், கோத்தாபய ராஜபக்ஷவின் புலனாய்வு மையத்தில் (NIB) செயல்பட்டவர். கைதான முஸ்லிம் நபர், கோத்தாபய ராஜபக்ஷவின் புலனாய்வு மையத்தில் (NIB) செயல்பட்டவர். Reviewed by Madawala News on 11/23/2016 04:24:00 PM Rating: 5