முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பல இணைந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை (நிகாய) உருவாக்குகிறது.



கடந்த காலத்தில் தனிமையாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பலவும் ஒன்று சேர்ந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை (நிகாய) அமைப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த பிக்குகள் குழுக்கள், கடந்த அரசாங்க காலத்தில் நாடு, இனம் மற்றும் சமயம் என்பன தொடர்பில் மக்களை எழுச்சிபெறச் செய்த ஒரே கருத்தைக் கொண்டவை என்பதாக கூறப்படுகின்றது.


தனித்தனியாக பிரிந்திருந்து தமது போராட்டத்தை முன்னெடுப்பதை விடவும், ஒன்றுபட்டு புதிய தலைமையின் கீழ் தமது கருத்தை முன்வைப்பதுதான் பொருத்தமானது என இந்த பிக்குகள் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
கடந்த 2 மாத காலமாக இந்த அமைப்புக்கள் ஒன்றிணைவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச ரீதியில் பல்வேறு மட்டத்தில் சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிறிய பிக்குகள் குழுக்களும், தேசிய மட்டத்தில் செயற்படும் பௌத்த பிக்குகள் குழுக்களும் இந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புதிய பிக்குகள் பிரிவொன்றை (நிகாயா) பிரகடனப்படுத்தியதன் பின்னர், அதற்கு மகாநாயக்க தேரராக யாரை  நியமிப்பது என்பது, தொடர்பில் கலந்துரையாடல்களில் உடன்பாடு காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
தேசிய ரீதியில் செயற்படும் பல பிக்குகள் அமைப்புகளிலிருந்து அதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


குறித்த பிரிவின் அறிவிப்புடன், பதிவாளர் ஒருவரும் செயற்குழுவொன்றும் நியமிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாகவும் நெத் எப் எம் செய்தி வெளியிட்டுள்ளது. D C
முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பல இணைந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை (நிகாய) உருவாக்குகிறது. முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பல இணைந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை (நிகாய) உருவாக்குகிறது. Reviewed by Madawala News on 11/18/2016 08:22:00 AM Rating: 5