Accaddemy

உலகப்புகழ் பெற்ற NOKIA மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில்...



பின்லாந்தை  தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த உலகின் புகழ் பெற்ற கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான NOKIA இரண்டு வருடங்களுக்கு முன் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான MICROSOFTக்கு  விற்க்கப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கையடக்கத் தொலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் MICROSOFT நிறுவனத்துடன் “இரண்டு வருடங்களுக்கு போட்டியில்லை” என்ற நோக்கியாவின் ஒப்பந்தம் 2016- உடன் முடிவடைவதைத் தொடர்ந்து இந்நிறுவனம் மீண்டும் கையடக்க தொலைபேசி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
HMD Global நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் NOKIA ஈடுபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2017ஆம் ஆண்டில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் “Mobile World Congress (MWC)” மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில். NOKIA புதிய ஸ்மார்ட்போன்களை அறிவிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

H B றிஸ்வானுஸ் ஸமான்   கொழும்பு.

உலகப்புகழ் பெற்ற NOKIA மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில்... உலகப்புகழ் பெற்ற NOKIA  மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில்... Reviewed by Madawala News on 11/23/2016 01:58:00 PM Rating: 5