நேர்மையான முச்சக்கர வண்டி சாரதிக்கு நோர்வே தூதரகம் பாராட்டு.



நோர்வேயிலிருந்து இலங்கை வந்த மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில் தவறவிட்ட பயணபொதி மீண்டும் கிடைத்த அரிய சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அவர் பயணித்த முச்சக்கர வண்டி சராதி, குறித்த மாணவியை தேடிப்போய் பயண பொதியை வழங்கியுள்ளார்.

இவ்வாறு நேர்மையான நடத்தையை வெளிக்காட்டிய முச்சக்கர வண்டி சாரதியான பிரான்ஸிஸ்க்கு நோர்வே தூதரகம் பாராட்டியுள்ளது.

கடந்த வாரம் கப்பல் மூலம் இலங்கை வந்த மாணவி ஒருவரே இவ்வாறு பயண பொதியை தொலைத்துள்ளார்.

குறித்த பையினை துறைமுக அதிகாரசபை மற்றும் கப்பல் துறை முகவர்கள் இணைந்து தேடியும் குறித்த பை கிடைக்கவில்லை. அவர் அவசரமாக மாலைதீவு சென்று விட்டார்.

எனினும் முச்சக்கர வண்டி சாரதியான பிரான்ஸிஸ் தனது முயற்சியினை விடாது ஹோட்டல்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சாரதிகளிடம் குறித்த நோர்வே பெண் குறித்து விசாரித்துள்ளார்.

ஒருவாறு நோர்வே தூதரகத்துக்கு குறித்த விடயத்தை தெரிவித்த சாரதி, பையை தூதரகத்தில் கையளித்துள்ளார்.

அடுத்த நாள் மாலைதீவு சென்ற மற்றொருவர் மூலம் குறித்த மாணவியின் பயண பொதி ஒப்படைக்கப்பட்டதுள்ளது.
நேர்மையான முச்சக்கர வண்டி சாரதிக்கு நோர்வே தூதரகம் பாராட்டு. நேர்மையான  முச்சக்கர வண்டி சாரதிக்கு நோர்வே தூதரகம் பாராட்டு. Reviewed by Madawala News on 11/05/2016 01:24:00 PM Rating: 5