டீக்கடையில் ஆன்லைன் மூலம் பேமென்ட் செய்யும் வசதி அறிமுகமானது...



500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து இந்திய  நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வழியின்றி தவித்து வருகின்றனர்.

வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் போதுமான பணம் இல்லாததால் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் மோனு என்பவர் தனது டீக்கடையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

இதனால் இவரது கடைக்கு வரும் மக்கள் சிரமமின்றி டீ குடித்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி செல்கின்றனர். இதுகுறித்து மோனு கூறுகையில் "பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருவதால் அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த முடிவை எடுத்தேன்" என்றார்.

மோனுவின் இந்த செயல் குறித்து வாடிக்கையாளர் சுஷாந்த் கூறும்போது, "மோனுவின் இந்த முடிவு இப்போதைய சூழ்நிலையில் மிகப்பெரிய உதவி" என்று நெகிழ்கிறார். ஆன்லைன் பண பரிவர்த்தனையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மோனுவின் கடைக்கு வந்து டீ அருந்தி செல்கின்றனர்.

- மாலைமலர் -
டீக்கடையில் ஆன்லைன் மூலம் பேமென்ட் செய்யும் வசதி அறிமுகமானது... டீக்கடையில் ஆன்லைன் மூலம்  பேமென்ட் செய்யும் வசதி அறிமுகமானது... Reviewed by Madawala News on 11/14/2016 07:48:00 PM Rating: 5