உலகின் மூன்றாவது வல்லரசு ஆகும் பாகிஸ்தான் ..



அபூஸாலி முஹம்மத் சுல்பிககார் 

 அதிகளவான அணு ஆயுதங்களையும் அணு ஆயுத விமானங்களையும் தயாரித்து உலகின் மூன்றாவது வல்லரசாக பாகிஸ்தான் உருவாகி வருவதாக தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது .


பாகிஸ்தான் தனது அணுஆயுது அளவை 130 லிருந்து 140 ஆக விரிபடுத்தி உள்ளதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.


அமெரிக்க அணுஆயுத விஞ்ஞானிகளான ஹன்ஸ் எம் கிறிஸ்டன்சன், ராபர்ட் எஸ் நோரீஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பாகிஸ்தான் தனது அணுஆயுத அளவை 130 லிருந்த 140 ஆக விரிபடுத்தி உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் ஜெட்களாகவும் மாற்றி வருகிறது. பாக்., ராணுவ முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்களின் செயற்கைகோள் படங்களை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.


3வது பெரிய நாடாக பாக்., போர் ஆயுத உற்பத்தியையும் பாக்., அதிகரித்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை 1999 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 2020 ம் ஆண்டில் பாக்.,ன் அணுஆயுத எண்ணிக்கை 60 முதல் 80 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதே 130 முதல் 140 அணுஆ யுதங்களை பாக்., வைத்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் அதிகப்படுத்த வாய்ப்புள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அணுஆயுதம் வைத்திருக்கும் உலகின் 3வது பெரிய நாடாக பாக்., உருவாகும். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பாக்.,ன் அணுஆயுத உற்பத்தி மற்றும் சேமிப்பு 2 முதல் 3 மடங்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மூன்றாவது வல்லரசு ஆகும் பாகிஸ்தான் .. உலகின் மூன்றாவது வல்லரசு ஆகும் பாகிஸ்தான் .. Reviewed by Madawala News on 11/19/2016 04:10:00 PM Rating: 5