Yahya

பாலஸ்தீன விவகாரத்தில் முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதற்கு திட்டமிட்டுள்ளனர் .பலஸ்­தீ­னத்­து­ட­னான உறவு பல­மா­கவே உள்­ளது. இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்­சினையை கலந்­து­ரை­யாடல் மூலமே தீர்க்க வேண்டும்.

இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வினை பலப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே யுனஸ்கோ வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­க­வில்லை. அமெ­ரிக்க அழுத்­தத்­திற்கு அடி­ப­ணிந்து தீர்­மானம் எடுக்­க­வில்லை.

அணி­சேரா கொள்கையை மீறி செயற்­ப­ட­வில்லை என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மா­னது. இதன்­போது அமைச்சு கூற்று நேரத்தில் உரை­யாற்றும் போதே அவர்  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தினேஷ் குண­வர்­த­ன­வினால் 23 (2)ன் கீழ் ஏற்­க­னவே எழுப்­பப்­பட்­டி­ருந்த கேள்­விக்கு மேலும் பதி­ல­ளிக்­கையில்,
முரண்­பா­டு­க­ளினால் ஏற்­படும் விளை­வுகள் தொடர்பில் நாம் நன்கு அறிவோம். இலங்­கையில் இனி­மேலும் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க மாட்டோம்.

அனைத்து மதங்­களின் உரி­மை­யையும் பாது­காக்கும் நாடு என்ற வகையில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது.

இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்­சினை தற்­போது தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன. மேலும் உக்­கி­ர­மான நிலைமை ஏற்­பட்ட வண்­ண­முள்­ளன. இதன் பிர­காரம் குறித்த பிரச்­சினையை தீர்ப்­ப­தற்கு யுனெஸ்கோ நிறு­வனம் பெரும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

எனவே இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை கலந்­து­ரை­யாடல் மூலம் தீர்க்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நாம் உள்ளோம். எனினும் அமெ­ரிக்­கா­விற்கு அடி­ப­ணிந்தே யுனெஸ்கோ வாக்­கெ­டுப்பின் போது பாலஸ்­தீ­னத்­துக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என குற்றம் சுமத்­தப்­ப­டுகிறது. நாம் அமெ­ரிக்­கா­வி­னதோ அல்­லது வெளி­சக்­தி­களின் அழுத்­தங்­க­ளுக்கோ அடி­ப­ணிந்து செயற்­ப­ட­வில்லை. எந்தச் சக்­தி­க­ளுக்கும் அடி­ப­ணி­ய­போ­வ­தில்லை.

இலங்­கை­யி­னு­டைய அணி­சேரா கொள்­கையில் எந்­த­வொரு மாற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. வெளி­நாட்டு கொள்­கையும் மாற­வில்லை. நாம் சரி­யான தீர்­மா­னத்­தையே எடுத்­துள்ளோம். பாலஸ்­தீ­னத்தின் உரி­மைக்­காக இலங்கை பல சந்­தர்­ப்பங்­களில் ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபையில் பாலஸ்­தீன தேசியக் கொடியை பறக்­க­வி­டு­வ­தற்கு இலங்கை முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­கி­யது. இது போன்று மனித உரிமை பேர­வையின் வாக்­கெ­டுப்­பிலும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது. பாலஸ்­தீன உறவை பலப்­ப­டுத்த 1987 ஆம் ஆண்டு பாலஸ்­தீன இலங்கை ஒருங்­கி­ணைப்புக் குழு நிறு­வப்­பட்­டது.

ஆகவே பாலஸ்தீன் நாட்­டு­ட­னான கொள்­கையில் எந்­த­வொரு மாற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. பாலஸ்­தீ­னத்­து­ட­னான உறவு பல­மா­கவே உள்­ளது.

யுனெஸ்கோ வாக்­கெ­டுப்பின் போது நாம் மாத்­திரமா வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­க­வில்லை. இந்­தியா உள்­ளிட்ட முஸ்லிம் நாடுகள் கூட பங்­கேற்­க­வில்லை. இந்­தியா அணி­சேரா கொள்­கையை கொண்ட நாடாகும்.

எனவே இஸ்ரேல்  – பாலஸ்தீன் உற­வினை பலப்­ப­டுத்தும் நோக்­கு­டனே கொள்கை அடிப்­ப­டையிலேயே வாக்­கெ­டுப்பில் பங்­க­கேற்­க­வில்லை.

எனினும் இஸ்ரேல் உட­னான உறவும் எமக்கு முக்­கியம்  எந்­த­வொரு நாட்­டு­டனும் எமக்கு முரண்­பட்டு செயற்­பட முடி­யாது. இஸ்­ரே­லு­டனும் நாம் பல­மான உற­வினை கட்­டி­யெ­ழுப்பி வரு­கின்றோம். இஸ்­ரேலில் 6000 இலங்­கையர் தொழில் புரிகின்றனர். இன்னும் வேலைவாய்ப்புகள்  கிடைக்கும். எமக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியமாகும்.

எனினும் பாலஸ்தீன வாக்கெடுப்பில் நாம் சார்ந்த தீர்மானத்தை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களில் முன்வைக்க முனைந்துள்ளனர்.

முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதற்கு திட்டமிட்டுள்ளனர் என்றார்.
பாலஸ்தீன விவகாரத்தில் முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதற்கு திட்டமிட்டுள்ளனர் . பாலஸ்தீன விவகாரத்தில்  முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதற்கு திட்டமிட்டுள்ளனர் . Reviewed by Madawala News on 11/23/2016 02:43:00 PM Rating: 5