கொழும்பு கோட்டை புத்தர் சிலையும் கூடமும் சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் அப்டேட்...



கொழும்பு கோட்டை ஸ்ரீசம்­புத்­தா­லோக விகா­ரைக்கு முன்­பாக பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருந்த புத்தர் சிலையும் கூடமும் கடந்த பத்தாம் திகதி   இனந்­தெ­ரி­யாத சில­ரினால் உடைக்­கப்­பட்­ட செய்தியும் படங்களும் சமூக வலைகளில் பரப்பப்பட்டு வருவது அறிந்ததே..

கொழும்பு கோட்டை ஸ்ரீசம்­புத்­தா­லோக விகா­ரையின் ரயில் மார்க்­கத்தை நோக்­கி­ய­வாறு காணப்­படும் இந்த புத்தர் சிலை­யுடன் அச்­சிலை பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருந்த கூட­மொன்றும் இதன்­போது சேத­மாக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் விசாரித்த போது,  இப்­புத்­தர்­சிலை இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் அக்­கூ­டத்­தி­லி­ருந்து கீழே தள்­ளி­வி­டப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த விகா­ரையின்  விகா­ரா­தி­பதி சாஸ்­ர­பதி விதா­ரந்­தெ­னிய மேதா­னந்த தேரர் தெரி­வித்­தார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ள போதிலும் இது­வ­ரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை இன்று போயா தினத்தில், இணைந்த பெளத்தர்கள் குறிப்பிட்ட சிலையை சீர் செய்து  மீண்டும் இருந்த இடத்தில் நிர்மாணித்ததாகவும் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புத்தர் சிலையும் கூடமும் சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் அப்டேட்... கொழும்பு கோட்டை புத்தர் சிலையும் கூடமும் சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் அப்டேட்... Reviewed by Madawala News on 11/14/2016 09:14:00 PM Rating: 5