Free Space

பி­ர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான சுவ­ரொட்­டி­க­­ளுடன் ரா­ஜ­கி­ரி­யவில் ஒரு­வர் கைது!



(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை மத்­திய வங்­கியின் 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பிணை முறி விவ­காரம் எனும் பெயரில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, அமைச்சர் அஜித் பி. பெரேரா மற்றும் வெளி­வி­வ­கார பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகி­யோரின் பெயரை உள்­ள­டக்கி தயார் செய்­யப்­பட்­டி­ருந்த சட்டவிரோத சுவ­ரொட்­டி­க­ளுடன் ராஜ­கி­ரிய பகு­தியில் வைத்து வெலிக்­கடை பொலிஸார் நபர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ளனர்.

ராஜ­கி­ரிய பகு­தியைச் சேர்ந்த சும­ன­தாஸ எனும் 58 வய­து­டைய நபர் ஒரு­வ­ரை­யே­பொ­லிஸார் கைது  செய்து நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் அர­சியல் ஸ்திர­மின்­மையை ஏற்­ப­டுத்தி அர­சுக்கு கலங்கம் ஏற்­ப­டுத்த முயன்றார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் ஆஜர்  செய்­தனர்.

இதன் போது குறித்த நபரை 5 இலட்சம் ரூபா சொந்தப் பியையில் செல்ல கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டிய உத்­த­ர­விட்டார்.

வெளி­வி­வ­கார பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா கடந்த 31 ஆம் திகதி வெலிக்­கடை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றினை  செய்­துள்ளார்.

அந்த முறைப்­பாட்டில் கடந்த ஒக்­டோபர் மாதம் 29 ஆம் திகதி அரசை இக்­கட்­டுக்குள் தள்ளும் வித­மாக தனது நற்­பெ­ய­ருக்கு கலங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் அரச விரோத போஸ்­டர்கள் ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர, மொரட்­டு­முல்ல, மத்­திய வெலிக்­கடை மற்றும் கங்­கொ­ட­வில பகு­தி­களில் ஒட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் பல­ருக்கு  அது பறி­மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்ப்ட்­டுள்­ளது.

இந் நிலையில் இது குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த வெலிக்­கடை பொலிசார் நாவல பகு­தி­யி­லி­ருந்து பிர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்­க­ளான அஜித் பீ பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகி­யோரை உள்­ள­டக்கி மத்­தி­ய­வங்கி பிணை முறி தொடர்பில் போஸ்­டர்கள் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது.

இந் நிலை­யி­லேயே சந்­தேக நபர் கைது  செய்­யப்­பட்­டுள்ளார்.
இத­னை­ய­டுத்து  அவ­ரிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது குரித்த போஸ்டர்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும்  கோட்டே நகர சபையின் உறுப்பினர்  ஒருவரே அந்த போஸ்டர்களை தன்னிடம் தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

(எம்.எப்.எம்.பஸீர் : கேசரி - மெட்ரோ )
பி­ர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான சுவ­ரொட்­டி­க­­ளுடன் ரா­ஜ­கி­ரி­யவில் ஒரு­வர் கைது! பி­ர­தமர் ரணில் மற்றும்  அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான சுவ­ரொட்­டி­க­­ளுடன் ரா­ஜ­கி­ரி­யவில் ஒரு­வர் கைது! Reviewed by Madawala News on 11/04/2016 01:44:00 PM Rating: 5