பிர­பா­க­ரனை நினைவு கூரலாம்... அதில் என்ன தவறு இருக்கின்றது? மஹிந்த அணியில் இருந்து ஒரு குரல்.



விஜே­வீ­ரவை நினைவுகூர முடி­யு­மென்றால் ஏன் பிர­பா­க­ரனை நினை­வு­கூர முடி­யாது எனக் கேள்வி எழுப்பும் வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. மாவீரர் அனுஷ்­டிப்பு என்ற போர்­வையில் தனித் தமி­ழீ­ழத்தை அனுஷ்­டிப்­பதை எதிர்க்­கின்றேன் என்றும் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக மஹிந்த அணி ஆத­ரவு எம்.பியான வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்;

 இலங்­கையில் இரண்டு தட­வைகள் கிளர்ச்­சி­களை மேற்­கொண்ட விஜே­வீ­ரவின் மறைவை அனுஷ்­டிக்­கின்­றனர். இதற்கு தடை எதுவும் விதிக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் பிர­பா­கரன் உயிர்­நீத்த தினத்தை அனுஷ்­டிப்­பதில் என்ன தவறு ? இதில் தவ­றேதும் இல்லை. ஜே.வி.பி. யும் ஒரு காலத்தில் தடை­செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பிர­பா­கரன் இறந்த தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டலாம். அதே­வேளை யுத்­தத்தில் உயிர்­நீத்த மக்­களை அனுஷ்­டிப்­பது தார்­மீக கடமை. அதற்கு தடை­வி­திக்­க­லா­காது. ஆனால் இதன் போர்­வையில் இலங்­கைக்கு எதி­ராக ஆயுதப் போராட்­டத்தை மேற்­கொண்­ட­வர்­களை நினைவு கூரு­வதும், தனித் தமி­ழீ­ழத்தை நினைவு கூருவதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.

இந்த இரண்டு விடயங்களும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.
பிர­பா­க­ரனை நினைவு கூரலாம்... அதில் என்ன தவறு இருக்கின்றது? மஹிந்த அணியில் இருந்து ஒரு குரல். பிர­பா­க­ரனை நினைவு கூரலாம்... அதில் என்ன தவறு இருக்கின்றது? மஹிந்த அணியில் இருந்து ஒரு குரல். Reviewed by Madawala News on 11/29/2016 09:05:00 AM Rating: 5