அக்குரணை யகீன், நிஸ்வான் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு PRESENTATION & LEADERSHIP SKILLS பயிற்சி.



கண்டி, அக்குறணை  யகீன் மொடல் ஸ்கூல் மற்றும் அதன் பெண்கள் பிரிவாகிய நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய பாடசாலைகளில் மாணவர்களின் தலைமைத்துவம் மற்றும் பேச்சுத் திறமைகளை வளர்க்கும் நவீன பயிற்சி முறைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.


இன்றைய நவீன உலகின் விரைவான மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக் கூடியவாறு தேவைப்படும் துறைகளில் மாணவ மாணவிகளை செவ்வனே பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் இப் பாடசாலைகளில் இந்த முறை அறிமுகம் செய்து வைக்கப் பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்தே இவ்வாறான பயிற்சிகளைப் பெற்று வரும் மாணவ மாணவிகள் குறிப்பிட்ட சில காலத்திற்குப் பின்னால் மிகப் பெரிய ஒரு முன்னேற்றத்தைக் காட்டுவது அவதானிக்கப்படுகிறது.

யகீன் மொடல் ஸ்கூல் மற்றும்  நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய பாடசாலைகள் எக்காலத்திலும் இவ்வாறான நவீன கற்றல் கற்பித்தல்  முறைகளை அறிமுகப் படுத்துவதில் கூடிய கவனம் செலுத்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருப்பதாக அதன் தலைவர் பஹ்மி பாரூக்  தெரிவித்தார்.

தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளில் இப் பயிற்சி நெறியில் ஈடுபட்டுள்ள சில மாணவிகளின் உரைகளை கீழுள்ள வீடியோ இணைப்பில் காணலாம்.



அக்குரணை யகீன், நிஸ்வான் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு PRESENTATION & LEADERSHIP SKILLS பயிற்சி. அக்குரணை  யகீன், நிஸ்வான் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு PRESENTATION & LEADERSHIP SKILLS பயிற்சி. Reviewed by Madawala News on 11/11/2016 09:06:00 AM Rating: 5