Ad Space Available here

கண்ணாடிப்பேழைக்குள் நுழைந்த சிறுமி எப்போது உயிர் பெறுவாள்..?லண்டனை சேர்ந்த 14 வயது டீனேஜ் சிறுமி , இறந்த தனது உடலை கடும் குளிரில்க ண்ணாடி குழாய்க்குள்    வைத்து நீண்ட காலம் பாதுகாக்கும் படி தொடுத்திருந்த வழக்கு நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது .

அசாதாரண புற்றுநோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்த சிறுமி தனக்கு நீண்ட நாள் வாழ ஆசையாக இருப்பதாகவும் ஆனால் நோய் காரணமாக மரணிக்க உள்ளதாலும் தனது உடலை கண்ணாடி குழாய்க்குள்
மைனஸ் 130 டிகிரி  செல்ஸியஸ் குளிரில், உடலும் மூளையும் பழுதடையாத வண்ணம் வைத்து (Cryogenically preserved ) நீண்ட காலம் பாதுகாக்கும் படியும் கேட்டிருந்தார் .

எதிர்காலத்தில் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நிலை, விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்கப்படுமானால் தான் உயிர் பெற்று மீண்டும் வாழ முடியும் என்பதுதான் அந்த சிறுமியின் ஆசை .

ஆரம்ப மனிதன்  தொடக்கம் ஆரம்பித்த ஆசை அல்லவா.. ? கடைசி வரைக்கும் சென்றுதானே ஆக வேண்டும்.


ஆம், இருபது வயது குமரனுக்கும் 60 வயது கிழவனுக்கும் இருக்கின்ற ஒரே ஆசை , 'இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும்'.


உடலை பழுதடையாமல் பாதுகாக்கும் தொழிநுட்பம் காலத்துக்குக்காலம்  வெவ்வெறு வடிவங்களில் மனிதனின் ஆசைகளோடும்  எதிர்பார்ப்புகளோடும்
அரங்கேரி வந்துள்ளது .

பிர் அவுனின் காலத்தில் கூட மன்னர்களுக்கும் செல்வந்தர்களுக்கும்
மரணிப்பதற்கு விருப்பம் இருந்திருக்கவில்லை . மரணித்த அவர்களின் உடல்கள் மம்மி படுத்தப்பட்டன . அதனால்தான் அக்காலத்தில் மம்மி படுத்தப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட கறுவா , தங்கத்தை விட  அதிக பெறுமதி வாய்ந்ததாக இருந்தது.

எதிர்காலத்தில்  விஞ்ஞானத்தால்உ யிர் கொடுக்கப்படும் தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு  தாம், உயிர் கொடுத்து எழுப்பப்படலாம் என்கிற ஆசை அவர்களிடம் இருந்ததால் அவர்கள் தம்மை மண்ணுக்குள் புதைக்க மறுத்திருந்தனர் . இன்றும் இலவு காத்த கிளியாக அதே இடத்தில்   மம்மியாக இருந்து  கொண்டிருக்கிறார்கள்.

மரணித்தவர்கள் மறுமையில் மாத்திரமே எழுப்பப்படுவார்கள் என்பது இஸ்லாம் கூறுவதில் தான் எத்தனை உண்மைகள்.. ?

மண்ணுக்குள்ளே அடக்கப்பட்டாலும் கண்ணாடி கூட்டுக்குள்ளே அடைக்கப்பட்டாலும் மனித மூளையால் உயிரை மட்டும் மீள கொடுக்க முடியாது என்பதை இன்றுவரை விஞ்ஞானம் கைவிரித்தபடி காட்டிக்கொண்டு இருக்கின்றது ..

நிலையில்லாத   இவ்வுலகத்தில் மனிதன் மரணிப்பான் அதன் பின்னர் அவன் செய்தவற்றுக்காக கூலி கொடுக்கப்படும் நியாய தீர்ப்பு நாளில் மீண்டும் எழுப்பப்படுவான்.

பின்னர்சொர்க்கம், நரகம் தீர்மானிக்கப்பட்டு நிரந்தர மறுமைக்கான   நிரந்தர வாழ்க்கை தீர்மானிக்கப்படுவான் என்று அழகாக சொல்லுகிறது இஸ்லாம்.

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! ......!”
(அல்குர்ஆன் : 4:78)

(இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 27:65)
 
"(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
  அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்."
(அல்குர்ஆன் : 75:3,4)

 -முஹம்மது ராஜி  
கண்ணாடிப்பேழைக்குள் நுழைந்த சிறுமி எப்போது உயிர் பெறுவாள்..? கண்ணாடிப்பேழைக்குள் நுழைந்த சிறுமி எப்போது உயிர் பெறுவாள்..? Reviewed by Madawala News on 11/19/2016 09:10:00 AM Rating: 5