Accaddemy

விலை ஏற்றத்தின் பின்னர் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்தது.



சிகரெட் விலையை உயர்த்தியதன் பின்னர் சிகரெட் விற்பனை வருமான வரி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 200 கோடி ரூபா மாதாந்த வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக திறைசேரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிகரெட் விலை உயர்த்தப்பட முன்னதாக மாதாந்த வரி வருமானம் 800 கோடி ரூபாவாக காணப்பட்டது. தற்போது இந்தத் தொகை 600 கோடி ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், தற்போது வருடாந்தம் சிகரெட் விற்பனை ஊடாக அரசாங்கம் 9600 கோடி ரூபா வருமானம் ஈட்டுகின்றது. இந்தத் தொகை இனி வரும் காலங்களில் 7200 கோடி ரூபாவாக வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகிறது.

விலை ஏற்றத்தின் பின்னர் சிகரெட் விற்பனை 15 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
விலை ஏற்றத்தின் பின்னர் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்தது. விலை ஏற்றத்தின் பின்னர் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்தது. Reviewed by Madawala News on 11/27/2016 10:25:00 AM Rating: 5