கடும் உஷ்ணம், வறட்சி காரணமாக இன்று காலை மக்கா முகர்ரமாவிலும், மதீனா முனவ்வராவிலும் மழைத் தொழுகை. (படங்கள்)

கடும் உஷ்ணம், வறட்சியின் காரணமாக இன்று வியாழக்கிழமை  (10/11/2016) காலை 6:45 இற்கு புனித மக்கா முகர்ரமாவிலும், மதீனா முனவ்வராவிலும் "ஸலாதுல் இஸ்திஸ்கா" -மழைதேடித் தொழும் தொழுகை, குத்பா, துஆ பிரார்த்தனை என்பன இடம்பெற்றன.


மக்கா,-கஃபாவில் குத்பா,தொழுகை என்பவற்றை ஹரம் ஷரீபின் இமாம்.அஷ்.ஷெய்க். பந்தர் பலீலாஹ் அவர்கள் நடத்திவைத்தார்கள். இரு ஹரம் ஷரீப்களின் தலைமை நிருவாகி.அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் மற்றும் மக்கா கவர்னர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் குழுவினர்,

இமாம்கள் என பல கலந்து கொண்டு பிரார்த்தனைகளிக் ஈடுபட்டனர்.


மதீனா-மஸ்ஜிதுன் நபவிய்யில் இமாம்.அஷ்.ஷெய்க். அப்துல் முஹ்ஸின் அல்காஸிம் அவர்களால் தொழுகை,குத்பா என்பன நிகழ்த்திவைக்கப்பட்டது.
-மெளலவி.அல்ஹாஜ்.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-

-ஷுஊனில் ஹரமைன்-

கடும் உஷ்ணம், வறட்சி காரணமாக இன்று காலை மக்கா முகர்ரமாவிலும், மதீனா முனவ்வராவிலும் மழைத் தொழுகை. (படங்கள்) கடும் உஷ்ணம், வறட்சி காரணமாக இன்று காலை மக்கா முகர்ரமாவிலும், மதீனா முனவ்வராவிலும் மழைத் தொழுகை. (படங்கள்) Reviewed by Madawala News on 11/10/2016 02:30:00 PM Rating: 5