மஹிந்த ராஜபக்ஷ மீது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ அள­வு ­க­டந்த அன்பு.



முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜ­யத்தின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணில்விக்கி­ர­ம­சிங்­கவே உள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மீது பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அள­வு­க­டந்த அன்பும் அக்­க­றையும் உள்­ளது என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.  

பசில் ராஜபக் ஷ விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பி­ல­விற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடை­யி­லான நெருக்கம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பலத்தை சீர­ழித்து வரு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர்

சந்­திப்­பின்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் சீன விஜயம் தொடர்பில் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மீது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அள­வு­க­டந்த அன்பும் அக்­க­றையும் உள்­ளது. மஹிந்த ராஜபக் ஷவின்  சகல தேவை­க­ளையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயங்­காது செய்து கொடுக்­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி என்ற வகை­யிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகை­யிலும் மஹிந்த ராஜபக் ஷவுக்­கான சகல சலு­கை­க­ளையும் வழங்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ தற்­போது சீனா­வுக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­வ­தற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் பிர­தமர் ரணில் விக்­க­ர­ம­சிங்­கவே செய்து கொடுத்­துள்ளார். ஆகவே இரு­வரும் நல்ல உறவை கையாண்டு வரு­கின்­றனர் என்­பதில் சந்­தேகம் இல்லை.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தும் வேலைத்­திட்­டமும் பல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதா­வது பசில் ராஜபக் ஷவிற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடை­யி­லான நெருக்­கமும் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில ஆகி­யோ­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடை­யி­லான நெருக்­கமும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பலத்தை சீர­ழித்து வரு­கின்­றது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ தற்­போதும் தமது தோல்­விக்கு துணை­போன நபர்­க­ளுடன் கைகோர்த்து நிற்­கின்றார். தற்­போது புதிய கட்­சி­களின் உரு­வாக்கம் புதிய பயணம் என்­பன எந்த வகை­யிலும் இன்­னொரு பல­மான பிர­வே­ச­மாக அமை­யாது. தாமரை மொட்டு ஒரு­போதும் மலரப் போவ­தில்லை என்­பதை அனை­வரும் கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் கைகோர்க்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர். ஆனால் அதில் எந்த உண்­மை­களும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியுடன் கைகோர்த்து நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தயாராக உள்ளனர்.அவ்வாறு இருக்கையில் புதிய கூட்டணியில் கைகோர்த்து தமது எதிர்காலத்தையும் நாட்டின் பயணத்தையும் ஒருபோதும் சீரழிக்க மாட்டார்கள் என்றார்.
மஹிந்த ராஜபக்ஷ மீது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ அள­வு ­க­டந்த அன்பு.  மஹிந்த ராஜபக்ஷ மீது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ அள­வு ­க­டந்த அன்பு. Reviewed by Madawala News on 11/25/2016 10:28:00 AM Rating: 5