முஸ்லிம்கள் தொடர்பில் எமது கோரிக்கைகள் இவைதான்...



-ARA.Fareel-

இலங்­கையில் முஸ்­லிம்­களின் ஷரீஆ சட்­டத்தை உட­ன­டி­யாக ரத்­துச்­செய்து முஸ்லிம் விவ­கா­ரங்­களை நாட்டின்  பொதுச் சட்­டத்­தினுள்  உள்­வாங்­கு­மாறு  பெளத்த சங்க சபை நீதி­ய­மைச்சர் விஜே­தாச  ராஜபக்ஷவிடம்  கோரிக்கை விடுத்­துள்­ள­தாக சிங்­கள ராவய அமைப்பின்  தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர்   தெரி­வித்தார்.

நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவை நேரில் சந்­தித்து  இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், நாட்டில் எத்­தனை பிரிவு மக்கள் இருந்­தாலும் அனை­வ­ருக்கும்  ஒரே சட்­டமே அமு­லி­லி­ருக்க வேண்டும். இன­ரீ­தி­யான, மத­ரீ­தி­யி­லான சட்­டங்கள் நடை­மு­றையில் உள்­ள­த­னாலே பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன. இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சல்கள் ஏற்­பா­டு­கின்­றன என்­பதை அமைச்­ச­ரிடம் விளக்­கி­யி­ருக்­கிறோம்.

அத்­தோடு முஸ்­லிம்கள் எமது வர­லாற்றுப் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளார்கள். முஸ்­லிம்­களால் கூர­கல, முகுது மகா விகாரை, தெவன கல போன்ற பிர­தே­சங்கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்தப் பிர­தே­சங்­களை மீட்டு பெளத்­தர்­க­ளுக்கே வழங்­கப்­ப­ட­வேண்டும்.

பெளத்­தர்கள் இஸ்­லா­மி­யர்­க­ளாக மதம் மாற்­றப்­ப­டு­வது  தடை செய்­யப்­பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்­துள்ளோம்.

ஐ.எஸ்.தீவி­ர­வா­திகள் இலங்­கையைத் தள­மாகக் கொள்­வ­தற்கு இடமளிக்கக் கூடாதெனவும், ஐ.எஸ்.உடன் தொடர்புபட்டுள்ள இஸ்லாமியர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டியுள்ளோம் என்றார்.
முஸ்லிம்கள் தொடர்பில் எமது கோரிக்கைகள் இவைதான்... முஸ்லிம்கள் தொடர்பில் எமது கோரிக்கைகள் இவைதான்... Reviewed by Madawala News on 11/24/2016 04:16:00 PM Rating: 5