Ad Space Available here

இம்முறை வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு எவ்வலவு நன்மை செய்திருக்கு தெரியுமா?"இன்று நாட்டிலுள்ள மக்கள் பேசுவது வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சாராய போத்தலின் விலை பற்றியாகும். ஆனால் 40 அத்தியாவசிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது குறித்து சிலருக்குத் தெரியாது.

 தெரிந்தாலும் பேசுவதில்லை. ரூபா 5000 இற்கு வாங்ககக்கூடியதான் மருந்துகளை இன்று ரூபா 3000 இற்கு வாங்கலாம். இது நூற்றிற்கு 35 அல்லது 40 வீதமாகும். இன்னும் சிலர் கேட்கின்றனர், இடது பக்கத்தால் தாண்டிச் சென்றால் விதிக்கப்படும் தண்டம் குறித்து. பயங்கரவாதிகளின் காலத்தில் இறந்தவர்களை விட தற்போது இவ்வாறானவர்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை மறந்து விட வேண்டாம்.

எங்களது தேவை தண்டப்பணம் மூலம் அதிக வருமானம் ஈட்டவல்ல. பாதையில் நீதியை நிலைநாட்ட வேண்டும். இது சகோதரக் கட்சிகளிடமும் பேசி எடுத்த தீர்வாகும். ஏனெனில் இது தேசிய அரசாங்கமாகும். ஆனால் இதைக் கொண்டு செல்வது சிக்கலானது. தனியான அரசாங்கம் போலல்லாமல் பதவிகளைப் பிரித்து முன்கொண்டு செல்வது பாரிய சவாலாகும். மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளில் நாங்கள் எந்தக் குறையும் செய்யவில்லை.

 பிரிவெனா கல்வினைப் பற்றிப் பேசுகையில் ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களே பிரிவினா ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார். நாங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் பிரிவெனாவில பயிலும் பிக்குமார்களுக்கு ரூபா 2500 மாதாந்த உதவு தொகையை வழங்கவுள்ளோம். ஆனாலும் பாராளுமன்றிலுள்ள தேசப்பற்றாளர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் சிலர் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கின்றனர்."

 என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சென்ற 27 ஆந்திகதி பிபிலை சிறீ சத்தர்மாலங்கார பிரிவெனாவில் நடைபெற்ற வருடாந்த மதிப்பீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் வருமானமாக எதிர்பார்க்கும் தொகை ரூபா 2000 பில்லியன். அதில் 800 பில்லியன் தொகை அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஓய்வூதியம் வழங்கவும் செலவாகிறது. அவ்வாறு வழங்கப்படுவது அவ்வளவும் மக்களின் பணமாகும்.

 1 கிலோ சீனிக்கும் 200 கிராம் தேயிலைக்கும் மக்கள் செலுத்தும் வரியே இங்கு ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இன்று 14 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். இவ்வாறு மானிட வளம் அதிகரித்தாலும் அதன் மூலம் நாட்டிற்கும் பொது மக்களுக்கும் கிடைக்கும் சேவையின் தரம் அதிகரித்துள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்று அரசாங்க நிர்வாக அமைச்சராகிய என்னால் கூற முடியும். அதனால் அரச சேவையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் அரசு என்ற வகையில் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகள் முன்னேறியது 5 எஸ் போன்ற திட்டங்களை அரச சேவையில் உள்ளடக்கியதாலாகும். இதனை நாங்களும் செய்ய வேண்டும். இன்று உற்பத்தித்திறனை உச்சமாக அதிகரித்துக் கொண்ட நாடுகள், தங்களது நாட்டின் கல்வித்தரத்தினை அதிகரிப்பதற்காக பாரிய நிதியினை ஒதுக்குகின்றன. நாங்களும் அதே போன்று கல்வித் தரத்தினை அதிகரிப்பதற்கான பாரிய திட்டமொன்றை வகுத்துள்ளோம்" என்றார்.

இந்நிகழ்வில், ஊவா மாகாண சங்க தலைவர் ஹெரலிவல சுனன்த நாயக்க ஹிமி,​வெல்லஸ்ஸ - பித்தன்ன பிரதேசங்களின் சங்க தலைவர் பதுளுகம்மன குணரதன நாஹிமி, முன்னணி மகா சங்கத்தினர், ஊவா மாகாண சபை உறுப்பினர் ஹரேந்திர தர்மதாச பண்டா, மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
இம்முறை வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு எவ்வலவு நன்மை செய்திருக்கு தெரியுமா? இம்முறை வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு எவ்வலவு நன்மை செய்திருக்கு தெரியுமா? Reviewed by Madawala News on 11/30/2016 02:52:00 PM Rating: 5