Accaddemy

திரைப்பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்களை அதிரடியாக பிடித்த போலீசார்.



வவுனியாவில் பல காலமாக வங்கிகளிலுள்ள இலத்திரனியல் பணப்பறிமாற்றத்தில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் நால்வரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவில் அண்மைக் காலங்களாக வங்கியிலுள்ள ஏ. ரி. எம். இயந்திரங்களில் பணம் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ். ஜ. பெரேரா தலைமையில் பொலிஸார் இரகசியமாக விசாரணைகள் மேற்கொண்டு வந்துள்ளனர்.


இதன் போது நூதனமான முறையில் இயந்திரங்களைக் கையாண்டு அதற்குள் கேமராவினை பொருத்தி ஏ. ரி. எம். அட்டையின் இலக்கத்தினை தெரிந்து கொண்டு அதன் பின்னர் பணம் அட்டையினை தயாரித்து திருட்டு செயலில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை பொலிஸாரின் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்த இலங்கையர் ஒருவரும் யாழைச் சேர்ந்த ஒருவருமாவார்கள்.

இவர்களிடமிருந்து ஏ.ரி.எம். இயந்திரங்களுக்குப் பொருத்தப்படும் உபகரணங்கள் உற்பட இலத்திரனியல் பொருட்கள் பலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த வகை திருட்டுகள் திரைப்படங்களில் வெகுவாக காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
திரைப்பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்களை அதிரடியாக பிடித்த போலீசார். திரைப்பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்களை அதிரடியாக  பிடித்த போலீசார். Reviewed by Madawala News on 11/10/2016 02:18:00 PM Rating: 5