உகலம் முழுதும் உள்ள அனைத்து அகதிகளையும் இங்கு அனுப்புங்கள். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.



புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்கப்படும் என பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி Rodrigo Duterte அறிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கதவுகள் அடைக்கப்பட்டு வரும் நிலையில், பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

2015ம் ஆண்டில் உலக அளவில் சுமார் 1.8 மில்லியன் புகலிடக் கோரிக்கையாளர்கள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டிருந்தது. தாம் புகலிடக் கோரிக்கையாளர்களை பிலிப்பைன்ஸிற்குள் வரவேற்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி Rodrigo Duterte புகலிடக் கோரிக்கையாளர்களும் மனிதர்களே எனவும் பிலிப்பைன்ஸிற்குள் அனுப்புங்கள் நாம் அவர்களை ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் மேற்குலக நாடுகளிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிலிப்பைன்ஸில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
உகலம் முழுதும் உள்ள அனைத்து அகதிகளையும் இங்கு அனுப்புங்கள். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உகலம் முழுதும் உள்ள அனைத்து அகதிகளையும் இங்கு அனுப்புங்கள். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். Reviewed by Madawala News on 11/18/2016 01:28:00 PM Rating: 5