Free Space

மீண்டுமொரு ஆபத்து! நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். (பகிரவும்) s

 
- அஷ்ரப் அலி பரீத்-

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட சிங்கள சகோதரர் டான் பிரியசாத்தின் கைது சிங்கள மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பலையை தோற்றுவித்துள்ளது. 

இதன் காரணமாக இந்த நள்ளிரவு தாண்டிய நிலையிலும் கொழும்பின் கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா தலைமையகம் நோக்கி சிங்கள  இளைஞர்கள் வருகை தந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

இந்நிலையில் டான் பிரியசாத்தின் பேஸ்புக் பக்கம் மற்றும் சிங்கள சகோதரர்களின் பேஸ்புக் பக்கங்களில் போய் நாம் வெற்றி பெற்று விட்டதாகவோ, சிங்கள சகோதரர்களை உசுப்பேற்றும் வகையிலோ பின்னூட்டங்கள் இடுவதை நம் சகோதரர்கள் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதற்கு சமமாகிவிடும்.

அத்துடன் கொழும்பு (அத்திடிய, ரத்மலானை, நுகேகொடைஈ கொஹுவளை, கொலன்னாவை) மற்றும் கண்டி, குருநாகல், தம்புள்ளை பிரதேசங்களில் இனவாதிகள் கலவரங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இப்பிரதேசங்களில் மட்டுமன்றி நாடுமுழுவதும் சனப் பரம்பல் குறைந்த , தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களிலும், சிங்கள மக்கள் மத்தியில் ஓரிருவராகவும் வாழும் முஸ்லிம்கள் இரண்டொரு நாட்கள் வரை அவதானமாக நடந்து கொள்வது புத்திசாலித்தனமான முன்னெச்சரிக்கையாக இருக்கும். 

அத்துடன் எந்தவொரு கட்டத்திலும் ஏனைய இனங்களுக்கு எதிராகவோ, அவர்களை தூண்டிவிடும் வகையிலோ பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் இடுவதையும்,  பொதுவெளி மற்றும் பொதுஇடங்களில் அநாவசிய சீண்டல்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். 

இது சமூகத்தின் நலன் கருதி நாம் செய்ய வேண்டிய அவசர, அத்தியாவசிய நடவடிக்கையாகும்.
மீண்டுமொரு ஆபத்து! நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். (பகிரவும்) s மீண்டுமொரு ஆபத்து! நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். (பகிரவும்) s Reviewed by Madawala News on 11/16/2016 06:59:00 AM Rating: 5